India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசோக் நகர் 19ஆவது அவென்யூ பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக புகார் வந்தது. இதனை அடுத்து, தற்போது அவரது வீட்டிற்கு அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், நீண்ட நேரமாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சோதனை முடிந்த பிறகு, விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற ஆர்.டி.ஆர் பாலாவை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், அசோக் நகரில் கடந்த 2021இல் நடந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் 2023 டிசம்பர் மாதம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது ஆர்.டி.ஆர். பாலாவை, போலீசார் கைது செய்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நாளை (ஜூலை 31) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், வேளச்சேரி, அடையாறு, பெசன்ட் நகர், காந்தி நகர், சாஸ்திரி நகர், திரிசூலம், வியாசர்பாடி, இந்திரா நகர், ஷர்மா நகர், கல்யாண புரம், சத்திய மூர்த்தி நகர், ஆவடி, பட்டாபிராம், ஷேக்காடு, தாம்பரம், ரங்கா நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க.
சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயம், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தாண்டு மழை மற்றும் வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு போட்டி நடத்தப்படுகிறது. தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, இரவு நேரத்தில் பாா்முலா 4 காா் பந்தயம் நடைபெற உள்ளது. இப்பந்தயம், தீவுத்திடலில் தொடங்கி 3.5 கி.மீ சுற்றளவில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியா் பாலம் வழியாக தீவுத்திடலைச் சென்றடையும்.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு பிறவியிலேயே முதுகுத்தண்டு வளைந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பான முறையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர் முன்னிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது குழந்தை ஓடி விளையாடுவதால், குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டு உள்ளது. காவல் மாவட்டங்கள் வாரியாக இந்த தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார். இதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் 74-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகம் எதிரே சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு பிரம்மாண்ட விழா மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், போக்குவரத்து மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டு மற்றும் அருங்காட்சியகங்கள் துறைகளின் சார்பில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் சுற்றுலா துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்திர மோகன், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஆன்மீகத்திற்கு எந்த விதத்திலும் திமுக அரசு தடையாக இல்லை என்றும், தமிழை முன்னெடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது வரை 1,920 கோயிலுக்கு குடமுழுக்கு முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டுக்குள் 2000 கோயிலுக்கு குடமுழுக்கு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.