India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் 53.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மைய அமையவுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமையவுள்ள இம்மையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி வைத்து அதன் மாதிரி வடிவத்தை பார்வையிட்டார்.
2024-25ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் செப்.30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த தவறினால், கூடுதலாக 1% தனி வட்டி செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை <
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.53.50 கோடியில் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், மூலகொத்தளத்தில் ரூ.14.31 கோடியில் புதிய சமுதாய நலக்கூடம், புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் ரூ.11.43 கோடியில் நவீன சலவைக் கூடம், புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் எரிகளை ரூ.36 கோடியில் மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.115.58 கோடி செலவில் 6 திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.
சிலைகளை பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சு & மக்காத ரசாயனம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
சென்னையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான விதிமுறைகளை மாசுக்கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் தயாரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது.
தீபாவளி, பொங்கல் போன்ற பல்வேறு பண்டிகைகளுக்கு மெட்ரோ நிறுவனம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் சனிக்கிழமை அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இந்த பொதுக்கூட்டம் சாட்சி, வருங்காலம் பாஜகவின் காலம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. ஆன்மீகத்தை பற்றி பேசாதவர்கள் , சனாதனத்தை பற்றி பேசியவர்கள், இன்று முருகனுக்கு மாநாடு எடுக்கிறார்கள் என்றால் இதுதான் பாஜகவின் முதல் வெற்றி. பெரியார் பெரியார் என்று சொன்னவர்கள் இன்று முருகா முருகா என்று சொல்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு :- அனைத்து கல்லூரியில் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்தவர் கலைஞர். எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பார் நம் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி விக்கிரவாண்டி இடைதேர்தலில் மட்டும் வெற்றி பெற வைக்கவில்லை ஒரே ஒரு செங்கலை வைத்து 40 தொகுதியிலும் வெற்றி பெற வைத்தவர். 2026 தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற வைக்க போகிறார் என்றார்.
Sorry, no posts matched your criteria.