India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து ஜாபர்சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் சகோதர் முகமது சலீம் விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமின் கோரிய ஜாபர்சாதிக் மனைவி மற்றும் அவரது சகோதரரின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய செல்வப் பெருந்தகை, விசாரணை என்ற பெயரில் கெஜ்ரிவாலை கைது செய்து சித்திரவதை செய்வது எப்படி நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். யார் மீது வழக்குகள் உள்ளதோ, அவர்கள் பாஜகவில் சேர்ந்த உடன் அவை திரும்பப் பெறப்படுகிறது எனவும் விமர்சனம் செய்தார்.
நேற்று பெண் ஒருவர் தெற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில், செம்மொழி பூங்கா குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல் செயல்களை பதிவு செய்து ‘பிரியாணி மேன்’ என்று யூடியூப் சேனலில் ஒருவர் பதிவிட்டுள்ளார் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் சேனலின் உரிமையாளரான அபிஷேக் ரபி என்பவரை கைது செய்தனர்.
தலைமைச் செயலகத்தில் இன்று CREDAI நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இணையதளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருது தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய மைக்கேல் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் துணைச் செயலாளர் பத்மஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பல்லாவரம் – தாம்பரம் – கூடுவாஞ்சேரி இடையே இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இரவு 11:30 முதல் அதிகாலை 2:30 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போன்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காலை 10:30 முதல் மதியம் 1:30 வரையும், இரவு 11:30 முதல் அதிகாலை 2:30 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்புராஹிம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் எனவும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 589 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.13.98 கோடி மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35% உயர்த்தி, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.21,000 – ரூ.30,000 வரை மாத சம்பளம் பெற்றால்: ரூ.135லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,000 – ரூ.45,000 வரை மாத சம்பளம் பெற்றால்: ரூ.315லிருந்து ரூ.430ஆகவும், ரூ.45,000 – ரூ.60,000 வரை மாத சம்பளம் பெற்றால்: ரூ.690லிருந்து ரூ.930ஆகவும் உயர்த்தப்பட்டது. கட்டணம் ரூ.500 – ரூ.15,000 வரை உயர்த்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.