India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கே.கே. நகர், கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், வரதராஜபேட்டை, ரங்கராஜபுரம், காமராஜ் காலனி, சூளைமேடு, சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், கில் நகர், அசோக் நகர், அழகிரி நகர், பத்மநாபன் நகர், ஐயப்பா நகர், 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காய்ச்சல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெரியசாமி நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மதுரவாயல் 150வது வட்டம் ஜெய் நகரை சேர்ந்த திமுக தொண்டர் ரவி காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதி இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டார். மேலும் ரவியின் பூத உடலை தனது தோளில் இறுதி வரை சுமந்து சென்றார். இந்த நிகழ்வு அப்பகுதி திமுக தொண்டர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. நீண்ட காலம் திமுகவில் இருந்தவருக்கு தான் செய்யும் மரியாதை என எம்.எல்.ஏ தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில்வரி நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் தொழில்வரி உயர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தனி நபர் தொடங்கி, தனியார் நிறுவனங்கள் வரை பாதிப்புக்குள்ளாகும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க தமிழக அரசை டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. நந்தனம், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர், வடபழனி, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வலைதள செயலியை www.tnwomencommission.tn.gov.in பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இந்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கல்வி மற்றும் மாணவர் சமூகம் பெருமளவில் பயனடையும் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் சென்னையில் இன்று இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மனுதாரர் கோரிக்கை ஏற்று அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ். மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.