Chennai

News August 27, 2024

டிவிஎஸ் நிறுவனத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்த்து

image

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலினை முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் தனது மனைவியுடன் சந்தித்தார். அப்போது, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். உடன் தலைமைச் செயலக அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் இருந்தனர்.

News August 27, 2024

கடந்தாண்டு மழை நமக்கு ஒரு பாடம்: மேயர் பிரியா

image

சென்னையில் மழைக்காலம் என்பது மிகவும் முக்கியமான காலகட்டமாகும். கடந்தாண்டு சென்னையில் வரலாறு காணாத மழை பதிவாகி இருந்தது. அது சென்னையில் வசிக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோரிக்கை வைத்த பகுதிகளிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

News August 27, 2024

வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்

image

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், இன்று முகாம் அலுவலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.

News August 27, 2024

வலுவான பாறைகளை கடந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்

image

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் இயந்திரமான காவிரி கடந்த 2 மாதம் முன்பு, அடையாறு மேம்பாலத்தின் கீழ் இருந்தது. வலுவான பாறைகள் காரணமாக பணிகள் மெதுவாகவே நடைபெற்றது. இந்நிலையில், இந்த இயந்திரம் தற்போது வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்‌.

News August 27, 2024

சென்னையில் விநாயகர் சதூர்த்தி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

image

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களில் மட்டும் சிலைகள் கரைக்க வேண்டும். சிலைகளில் இயற்கை சாயங்களால் மட்டுமே அலங்காரப்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் பயன்படுத்த கூடாது உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 27, 2024

சென்னையில் பெண்களுக்கு காவல்துறை அறிவிப்பு

image

சென்னைக்கு பணி நிமித்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பெண்களுக்கு சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான அடையாறு, தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் இயங்கி வருகிறது. இதில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற எண்ணிலும், http://tnwwhcl.in என்ற இணையதளத்திலும்விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2024

டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

image

இந்தியாவில் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இவை உட்கார்ந்து பயணிக்கும் வசதிகள் உடையவை. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட சில வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இன்னும் வழித்தடம் குறித்து முடிவு செய்யப்படவில்லை.

News August 27, 2024

மெட்ரோ – டிராபிக் ஸ்டடி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற்கட்டமாக 54.1 கி.மீ தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 116 கி.மீட்டருக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தாம்பரம், வேளச்சேரி, கிண்டி வரை 26 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் வழிதடத்திற்கான டிராபிக் ஸ்டடி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

News August 27, 2024

சென்னை கார் பந்தய வழக்கு நாளை விசாரணை

image

சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அவசரமாக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை , நாளை எடுத்துக்கொள்ளப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

News August 27, 2024

சென்னை அருகே 10 டன் போதைப் பொருள்

image

சென்னை அடுத்த பூந்தமல்லியில் போலீசாரின் வாகன சோதனையின் போது லாரியில் கொண்டு வரப்பட்ட 10 டன் எடையில் போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. லாரி கண்டெய்னர் முழுவதும் இருந்த புகையிலை குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பூந்தமல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. பூவிருந்தவல்லி மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு ரூ.75 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!