India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். http://tnstc.in, மொபைல் செயலி வழியே முன்பதிவு செய்யலாம்.
சென்னை கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் எட்டாவது கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் சமூக நல ஆணையரக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நல ஆணையர் வே.அமுதவல்லி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெருமழை மற்றும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளா மாநில அரசு துறைகளுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட சென்னையில் இருந்து தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் 20 வீரர்கள் கேரளா விரைந்தனர்.
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, தனது பேச்சுக்கான விளைவை தற்போது உணர்ந்துவிட்டதாகவும், இனி பெண் காவலர்கள் குறித்து பேச மாட்டேன் எனவும் பெலிக்ஸ் உறுதியளித்தார். இதையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டார்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், தமிழ்நாடு மாநில AVGC – XR கொள்கை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், AVGC -EX துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கான மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டை DPH இயக்குநரகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கான விழிப்புணர்வு குறும்படத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்டார்.
சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது வீட்டினுள் இருந்த ஒரு அறையில் இளைஞர் (24) ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவர் இறந்தது கூட தெரியாமல் மற்றொரு அறையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் இருந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகளும் தயாராக உள்ளதாக இன்று (ஜூலை 31) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.