Chennai

News August 29, 2024

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் இருக்க கூடாது

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் நிறுவும் இடத்தில் நில உரிமையாளர்கள் அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்ற வேண்டும். கூடுதலாக, தீயணைப்பு துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் அருகே சிலைகளை நிறுவக் கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 29, 2024

இன்று இரவு ரயில் சேவையில் மாற்றம்! – check once and publish/push

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து விழப்புரம் பிரிவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை 6 மணி நேரம் சென்னை கடற்கரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 29, 2024

சென்னையில் சாரல் மழை

image

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ராயபுரம், திருவல்லிக்கேணி, மணலி, போரூர், கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, அடையாறு, ஆலந்தூர், வியாசர்பாடி, திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்யுதா? கமெண்ட் பண்ணுங்க.

News August 29, 2024

விநாயகர் வழிபாடு சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம்

image

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் அருண் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வரும் பல்வேறு அமைப்பினருடன் நடந்த இந்த கூட்டத்தில், அவர்களுக்கு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது தொடர்பான விதிமுறைகள் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

News August 29, 2024

கடற்கரை தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

image

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே சென்னை மாநகராட்சி குப்பை கையாளும் பணியை மேற்கொள்கிறது. ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையிலும் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

இன்று இரவு வந்து செல்லும் போக்குவரத்து அதிகாரிகள்

image

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 28 இரவு ரோந்து பணி செல்லும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் பகுதியில் அண்ணாதுரை (ph:94981-76069), அடையாறு தாமஸ் மவுண்ட் பகுதியில் நரேஷ் குமார் (ph: 95661-15656), டி நகர் பகுதியில் சமீனா (ph; 94981-38741). ஆகியோர் இன்று இரவு வந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.

News August 28, 2024

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம்

image

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

News August 28, 2024

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்க ஒப்பந்தம்

image

சென்னை பள்ளிகளில் பிரஞ்சு மொழி கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் நிறுவனம் இடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் கையெழுத்தானது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது புகாரளிக்கலாம்

image

சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சியின் @chennaicorp என்ற எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மேலும் புகார் தெரிவித்த சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

வரும் 6ஆம் தேதி திமுக மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம்

image

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி எழிலரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!