Chennai

News August 29, 2024

வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் கட்டும் பணி நிறுத்தி வைப்பு

image

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வள்ளுவர்கோட்டத்தில் மேம்பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தி முடிக்கும் வரை நிறுத்தி வைக்கவும், நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தவிர்த்து மீதமுள்ள நிதியை மாநகராட்சியின் மற்ற மேம்பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்தவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

News August 29, 2024

சென்னை மாநகராட்சி கூட்டத்தில், 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

சென்னையில் நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில், 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான மயானங்களில் எரிவாயு தகன மேடை அமைத்தல், மாநகராட்சியில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி 46% ஆக உயர்த்துதல், மாநகராட்சியில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் மற்றும் அதற்கு ரூ.10 கோடி ஒதுக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News August 29, 2024

உயர்கல்வி படிப்பவர்கள் தமிழகத்தில் தான் அதிகம்

image

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாபாநாயகர் அப்பாவு, “இந்தியாவிலேயே 89% சதவீத மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கிறார்கள். இந்த ஆண்டு ரூ.4,48,292 கோடியில் பள்ளிக்கல்விக்காக மட்டும் 8% நிதியாக ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி, ஒன்று முதல் 14 வயது வரை உள்ள கட்டாயக் கல்வியை, மோடி அய்யா கொண்டு வந்ததால் தான் ஏற்கவில்லை என்று அர்த்தம் இல்லை” என கூறினார்.

News August 29, 2024

தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரானது இல்லை

image

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்தியதாகவும், இதன் மூலம் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது என கூறினார்.

News August 29, 2024

சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம்

image

சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

News August 29, 2024

செருப்பால் அடிக்க வேண்டும்: விஷால் ஆவேசம்

image

சினிமாவுக்கு வரும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டுமென நடிகர் விஷால் கூறியுள்ளார். கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளிக்கலாம். சினிமாவுக்கு வரும் பெண்களில் 20% பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.

News August 29, 2024

சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றிரவு மற்றும் நாளை காலை இயக்கப்படவுள்ள மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10, 9.30 மற்றும் நாளை காலை 4.15க்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து. தாம்பரத்திலிருந்து இன்றிரவு 10:40, 11.20,11.40 ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்களும் ரத்து. சென்னை கடற்கரை – திருவள்ளுவர் இடையே இன்றிரவு இயக்கப்பட இருந்த ரயிலும் ரத்து.

News August 29, 2024

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் இருக்க கூடாது

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் நிறுவும் இடத்தில் நில உரிமையாளர்கள் அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்ற வேண்டும். கூடுதலாக, தீயணைப்பு துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் அருகே சிலைகளை நிறுவக் கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 29, 2024

இன்று இரவு ரயில் சேவையில் மாற்றம்! – check once and publish/push

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து விழப்புரம் பிரிவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை 6 மணி நேரம் சென்னை கடற்கரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 29, 2024

சென்னையில் சாரல் மழை

image

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ராயபுரம், திருவல்லிக்கேணி, மணலி, போரூர், கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, அடையாறு, ஆலந்தூர், வியாசர்பாடி, திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்யுதா? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!