India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் 3.5 மீ அகலத்திற்கு அதிகமாக உள்ள கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள், மிதக்கும் கழிவுகள் மற்றும் சகதிகளை அகற்றப்படுகிறது. நீரிலும், நிலத்திலும் இயங்கும் ட்ரெயின் மாஸ்டர் எனப்படும் இயந்திரத்தின் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை முகாம் அலுவலகத்தில், பாரா பாட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் ஜெகதீஷ் டில்லி, இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். அவரின் சாதனைக்கு துணை நிற்கின்ற விதமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலையை இன்று அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 வது ஆண்டு பெருவிழா நடைபெற உள்ளதை ஒட்டி. மெரினா காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் தேவாலயத்தின் முன்பு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்புள்ளது.
சென்னை முகாம் அலுவலகத்தில், (Formula4 Chennai Racing On the Street Circuit) இல் பங்கேற்க உலகம் முழுவதிலிருந்தும் கார் பந்தைய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள், இன்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்படும் இந்த மதிப்புமிக்க நிகழ்வில் பங்கேற்பதில் தாங்கள் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம் செப்.5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பெரிய நடிகரின் படம் என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் ‘அனுமதியின்றி 7 காட்சிகள் திரையிடக் கூடாது’ என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் எண். 12667 இன்று (29.08.2024) சென்னை எழும்பூரில் இருந்து 18.55 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த இரயில் குறித்த நேரத்தில் புறப்பட இயலாமல் (30.08.2024) 00.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெசன்டநகர் “அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்” ஆண்டு விழா – 2024, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 08.09.2024 அன்று நிறைவடைகிறது. அதையொட்டி, சென்னை எம்டிசி சார்பாக பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்திற்கு கூடுதல் பேருந்துகள் மாலை 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இன்று முதல் 08.09.2024 வரை இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ரயில் எண். 12164 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – லோக்மான்ய திலக் டெர்மினஸ் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், இன்று (29.08.2024) டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து மாலை 18.20 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டது. இரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் இந்த ரயில் 3 மணிநேரம் தாமதமாக இன்று இரவு 21.20 மணிக்குப் புறப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை ஃபார்முலா4 கார் பந்தையம் காரணமாக ஆக.30 முதல் செப்.1-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போர் நினைவிடத்திற்கு வாலாஜா, அண்ணாசாலை, ஈவிஆர் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவானந்தசாலை, கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் பந்தய வழக்கு சற்று நேரத்தில் வரவுள்ள நிலையில் கார் பந்தயம் நடக்குமா, நடக்காத என்ற உங்களது கருத்தை தெரிவிக்கவும்.
பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1.77 கோடி சேலை மற்றும் வேஷ்டிகளை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேஷ்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவு கட்டாயம் என்றும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.