India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில், பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்வதற்கான செயலியை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. வார இறுதி நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. புதிய பார்க்கிங் விதிமுறைகளின் ஒரு பகுதியாக, பயனர்களின் பார்க்கிங் நேரம் முடிவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு ஆப் அவர்களுக்குத் தெரிவிக்கும். இந்தக் கொள்கை முதலில் அண்ணாநகரில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 7 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செலவீன தொகையாக ரூ. 17.45 லட்சத்திற்கான காசோலையை வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (29.08.2024) வழங்கினார். இதில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா உடனிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வரதன் உடல் நலக்குறைவால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, அவர் நலம் விசாரித்தார்.
முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30-ஆம் தேதி 355 பேருந்துகளும், 31-ஆம் தேதி 360 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் சாலையோரம் நிற்கும் ஸ்கூட்டர்களின் ஸ்டார்டிங் மோட்டார் ஒயர்களை துண்டித்து, தன் கையில் கொண்டு வந்த துண்டு ஒயரை வைத்து புதிதாக இணைப்பு ஏற்படுத்தி பைக்குகளை திருடி சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் தங்கள் குடும்பத்திற்குள், பணியிடத்தில், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு One Stop Center (ஓ.எஸ்.சி) “சகி” ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறது. இந்த அமைப்பு ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது. இத்திட்டத்தில் உதவி பெற பெண்கள் 181-ஐ அழைக்கலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் அதிகாரிகள் அங்கு சென்று கண்காணித்து அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் 3.5 மீ அகலத்திற்கு அதிகமாக உள்ள கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள், மிதக்கும் கழிவுகள் மற்றும் சகதிகளை அகற்றப்படுகிறது. நீரிலும், நிலத்திலும் இயங்கும் ட்ரெயின் மாஸ்டர் எனப்படும் இயந்திரத்தின் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை முகாம் அலுவலகத்தில், பாரா பாட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் ஜெகதீஷ் டில்லி, இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். அவரின் சாதனைக்கு துணை நிற்கின்ற விதமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலையை இன்று அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 வது ஆண்டு பெருவிழா நடைபெற உள்ளதை ஒட்டி. மெரினா காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் தேவாலயத்தின் முன்பு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்புள்ளது.
Sorry, no posts matched your criteria.