Chennai

News August 30, 2024

சென்னை புறநகர் ரயில்கள் நிறுத்தம்

image

சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி இடையே புறநகர் மின்சார ரயில் பாதையில் கோளாறு ஏற்பட்டதால் சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரயில்களால் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர். மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News August 30, 2024

சென்னை சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில்

image

தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி சென்னை – சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. செப்.4,11,18,25, ஆக். 2,9,16,23,30 மற்றும் நவ. 6,13,20,27-ஆகிய தேதிகளில் சென்னயி இருந்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8.50 மணிக்கு ரயில் சந்திரகாச்சி செல்லும்

News August 30, 2024

சென்னையில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் கோளாறு

image

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 226 பயணிகளுடன் இன்று புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News August 30, 2024

சென்னையில் பயங்கர தீவிபத்து

image

சென்னை கோயம்பேட்டில் IPS, IAS அதிகாரிகள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விருகம்பாக்கம் கெங்கையம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள சூட்டிங் செட் குடோனில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர தீ விபத்தால் பெரும் கரும்புகை அப்பகுதியில் சூழ்ந்துள்ளது, அசோக்நகர், விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 30, 2024

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி

image

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் ஷமிம் அகமது. இவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதனை மறுபரிசீலனை செய்ய கோரி நீதிபதி ஷமீம் அகமது கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதனையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

News August 30, 2024

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதிகள்

image

சென்னையில் 11, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

கூவம் நதியை சீரமைக்க ரூ.735 கோடி ஒதுக்கீடு

image

சென்னை ரிப்பன் மாலையில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் மேயர் பிரியா அறிக்கை வெளியிட்டு பேசினார். அதில், சென்னை கூவம் ஆறு அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் ரூ.735 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

News August 30, 2024

சென்னையில் 2,600 பேருக்கு வேலை

image

சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில், சென்னை தரமணி, செம்மஞ்சேரி, சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்பிங்ஃஸ், நோக்கியா, அப்ளைடு மெட்டீரியல்ஸ் கீக்மைண்ட்ஸ் நிறுவனங்கள் கோடி கணக்கில் ஒப்பந்தம் செய்துள்ளன. இதில், சுமார் 2,600 [பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

பார்முலா 4 ரேஸ் போட்டியால் போக்குவரத்து மாற்றம் 2/2

image

*சிவானந்த சாலை, கொடிமர சாலை முற்றிலும் மூடப்படும். *காமராஜர் சாலையில் இருந்து வரும் மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் இல்லை. *சென்ட்ரல் லைட்டில் இருந்து பல்லவன் சாலை வரை வழக்கம் போல் செல்லலாம். *பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. *முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணா சாலை மற்றும் கொடிமர சாலைக்கு அனுமதியில்லை.

News August 30, 2024

பார்முலா 4 ரேஸ் போட்டியால் போக்குவரத்து மாற்றம் 1/2

image

பார்முலா 4 ரேஸிங் போட்டியை முன்னிட்டு இன்று முதல் வரும் 1ஆம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *காமராஜர் சாலையில் இருந்து போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும். *அண்ணா சாலையில், வாலாஜா பாயின்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

error: Content is protected !!