Chennai

News August 31, 2024

திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

image

சென்னையில் வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்து 18 மாதங்களாகி விட்டது. திருப்புகழ் குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News August 31, 2024

மயிலாப்பூர் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

image

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு சொந்தமான மயிலாப்பூர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், 5ஆவது நாளாக தேவநாதனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News August 31, 2024

சென்னை அருகே 32 கல்லூரி மாணவர்கள் கைது

image

காட்டாங்கொளத்தூர் பொத்தேரியில் உள்ள SRM கல்லூரியில் கஞ்சா புகாரில் ஒரு மாணவி உள்பட 32 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பொத்தேரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ரவுடி செல்வமணி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவர்களின் அறையில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகள், ஹூக்கா பவுடர், கஞ்சா ஆயில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் மண்டபத்தில் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News August 31, 2024

வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது

image

சென்னை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நூல்கள் விவரம், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை dlochennai1@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

News August 31, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவரிடம் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டினப்பாக்கம் பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டிய புகாரில் மாட்டுராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பர் எனவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக புதூர் அப்புவிற்கு ஏதேனும் உதவி செய்துள்ளாரா என்ற கோணத்திலும் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 31, 2024

சென்னையில் கார் ரேஸ் காண 500 பேருக்கு இலவசம்

image

சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடங்குகிறது. முதல்முறையாக சென்னையில் இன்று தொடங்கும் இந்த கார் பந்தயத்தை இலவசமாக காண விளையாட்டுத்துறை சார்பில் FREE TICKET CODE அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். கார் பந்தயத்துக்காக 8,000 இருக்கைகள், மின்விளக்குகள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

News August 31, 2024

சென்னையில் பல இடங்களில் இன்று மின் தடை

image

சென்னையில் இன்று (ஆக.31) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பெருங்களத்தூர், திருவேற்காடு, கிண்டி, ஆலந்தூர், வானுவம்பேட், குரோம்பேட்டை, தாம்பரம் மேற்கு, மாடம்பாக்கம், சேலையூர், செம்பாக்கம், கடப்பேரி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் செய்யப்படும். SHARE IT

News August 31, 2024

ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு மெட்ரோவில் இலவசம்

image

சென்னையில் நாளை நடைபெற உள்ள ஃபார்முலா கார் பந்தயத்தை காண மெட்ரோ ரயில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் இன்சைடர் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் பிரத்தியேக டிஜிட்டல் QR பாஸ் அளிக்கப்படும் என்றும், இந்த பாஸ்களை ஸ்கேன் செய்து இலவசமாக பயணிக்கலாம் எனவும் மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ மற்றும் ரேசிங்க் சர்க்யூட் இணைந்து ஸ்பான்ஸர் முறையில் அளிக்கிறது.

News August 30, 2024

சென்னை பார்முலா 4 கார் ரேஸ் அட்டவணை வெளியீடு

image

சென்னை தீவுத்திடலில் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் ரேஸ் கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தில் ஏ பி என்று இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டு முதல் பந்தயத்தில் ஏ பிரிவும் இரண்டாவது பந்தயத்தில் பி பிரிவும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அண்ணா சாலை ராஜாஜி சாலை காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலைகளில் 3.5 கிமீ க்கு பிரத்தியேக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

மீண்டும் சென்னை – சீரடி இடையே நேரடி விமான சேவை

image

சென்னை – சீரடி இடையே இரு மார்க்கத்திலும் இயங்கி வந்த விமான சேவையை கொரோனா பரவல் காரணமாக இண்டிகோ நிறுவனம் நிறுத்தியது‌. இந்நிலையில், சென்னை – சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் முதல் மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் இருந்து மதியம் 2:30 மணிக்கும், சீரடியில் இருந்து மாலை 5:00 மணிக்கும் விமானம் புறப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!