Chennai

News August 31, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிகரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

News August 31, 2024

தமிழகத்தில் போதை பொருள் விற்பனைசிண்டிகேட்

image

தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பனை செய்ய சில ‘சிண்டிகேட்’ உள்ளன. இவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை நம் நாட்டிற்கு அனுப்புகின்றனர். போதைப் பொருட்கள் விற்கும் பணத்தில் தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

திமுக கூட்டணியுடன் தான் நமது இயக்கத்தை பாதுகாக்க வேண்டும்

image

சென்னையில் நடைபெற்ற மதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ, செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை காமராஜர் அரங்கத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு கட்சி நிர்வாகிகள் நிதி கொடுக்க வேண்டாம். இனி திமுக கூட்டணியுடன் தான் நம்முடைய இயக்கத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

News August 31, 2024

அமைச்சர் உதயநிதிக்கு விஜய் ஆண்டனி வாழ்த்து

image

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் “சென்னையின் புதிய வரலாறு, உங்கள் முயற்சியால் இந்தியாவின் முதல் முதலாக எதிர்பார்க்கப்படும் ஃபார்முலா 4 கார்பந்தயம் இந்த ஆண்டின் பெரிய வரலாறாக இருக்கப் போகிறது” என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

image

சென்னை, பிராட்வே பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரூ. 822 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், புதிதாக அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

News August 31, 2024

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தனியார் பள்ளி என பெயர்

image

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிக்குலேஷன் என்ற பெயரை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிக்குலேஷன் என்ற பெயரை நீக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தது.

News August 31, 2024

கொளத்தூர் உதவி ஆணையர் மாரடைப்பால் மரணம்

image

சென்னை கொளத்தூர் காவல் சாரக உதவி ஆணையர் சிவக்குமார் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாதுகாப்பு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். கார் பந்தையத்தை பார்வையிட அமைக்கப்பட்ட மேடையில் நின்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே காவல் ஆணையர் சிவக்குமார் காலமானார்.

News August 31, 2024

தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

image

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “மதுபானம் மற்றும் கஞ்சாவால் ஒவ்வொரு கிராமங்களில் இருந்து 30 பேர் இளம் விதவையாக இருந்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும்” என்றார்.

News August 31, 2024

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை

image

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News August 31, 2024

சென்னை காக்னிசன்ட் வளாகம் ரூ.800 கோடிக்கு விற்பனை

image

சென்னையின் பிரபல ஐ.டி., நிறுவனமான “காக்னிசன்ட்”, துரைப்பாக்கம் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள கிளை அலுவலகத்திற்கு மாற்றப்படவுள்ளது. எனவே துரைப்பாக்கத்தில் உள்ள 15-ஏக்கர் வளாகத்தை ரூ. 800 கோடிக்கு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!