Chennai

News September 1, 2024

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யுமா? பெய்யாதா? கமெண்டில் சொல்லுங்க.

News September 1, 2024

உதவி எண்களை அறிவித்த தெற்கு ரெயில்வே

image

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட்டு ஆந்திரா வழியாக செல்லும் ரயில்கள் சில திருப்பிவிடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் பொருட்டு, உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவை, 044-25354995, 044-25354151 ஆகும். ரயில்கள் சம்பந்தமான சந்தேகத்திற்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News September 1, 2024

1 மாணவி உள்பட 11 மாணவர்களுக்கு ஜாமீன்

image

சென்னை அடுத்த பொத்தேரியில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், கைதானவர்களில் 1 மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை, செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது. மேலும், இவர்களுக்கு, போதைப் பொருள் விநியோகித்த மூவரை 15 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

News September 1, 2024

கொலை வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்

image

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா தெருவில், கடந்த மாதம் லோகேஷ் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்தனர். இந்த வழக்கில், மண்டை பிரகாஷ், மதன், பிரகாஷ்ராஜ், சுரேந்தர், தண்டபாணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை செய்த 5 பேருக்கும் குண்டாஸ் வழங்கி உத்தரவிட்டார்.

News September 1, 2024

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

‘ஹேப்பி ஸ்ட்ரீட் ‘ நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர், ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்ல, Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் “U” திருப்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் செல்லலாம். <>மேலும் விவரங்களுக்கு<<>>

News September 1, 2024

சென்னயில் உயிரிழந்த காவல் அதிகாரிகுடும்பத்துக்கு நிவாரணம்

image

சென்னை தீவுத்திடலில் கார்பந்தைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை உதவி ஆணையர் சிவகுமார் மாரடைப்பல் உயிரிழந்தார். ஆவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

News September 1, 2024

சென்னை அருகே ரூ.50.65 கோடி மதிப்பில் போதைப்பொருள்

image

சென்னையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தவிருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாம்பரம் அடுத்த பொத்தேரில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.50.65 கோடி மதிப்புள்ள 10.13 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 31, 2024

விளையாட்டு துறையில் தனி இடத்தை பெற்றுத் தரும் – உதயநிதி

image

தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெறும் இரவு நேர கார் பந்தய போட்டி, ” உலக அளவில் இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் விளையாட்டுத்துறையில் தனி இடத்தைப் பெற்றுத் தரப் போவது உறுதியென ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கார் பந்தய வீரர்கள் நிகழ்த்திய சாகசத்தை மகிழ்ச்சியோடு கண்டு களித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

சென்னை கார் பந்தய ட்ராக்கில் புகுந்த நாயால் பரபரப்பு

image

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தய ட்ராக்கில் நாய் ஒன்று திடீரென புகுந்தது. அதனை பிடிக்க கார் பந்தய பணியாளர்கள் முயன்றனர். வேகமாக செல்லும் கார் பந்தயத்தின் நடுவே நாயை சென்றதாலும் அதனை பிடிக்க பணியாளர்கள் டாட்ட ஏசி வாகனத்தில் சென்று பிடிக்க முயன்றதாலும் பரபரப்பு நிலவியது. பின்னர் நாய் பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர்.

News August 31, 2024

சென்ட்ரல் – கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் ரத்து

image

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06043) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் கொச்சுவேலியிலிருந்து 5, 12, 19, 26 தேதிகளில் மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06044) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!