Chennai

News September 2, 2024

சென்னை வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து

image

சென்னை நோக்கி வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால், ஆம்னி பேருந்து மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில், ஓட்டுநர், பயணிகள் என 15 படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News September 2, 2024

சென்னையில் 18 ரயில் சேவைகள் ரத்து

image

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, சென்னையில் இருந்து செல்லும் ஷாலிமார் கோரமண்டல் , சார்மினார் எக்ஸ்பிரஸ், கோர்பா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் 6ஆம் தேதி வரையிலான ரயில் சேவைகளில், 18 சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று மட்டும் 8 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 2, 2024

சென்னை மாநகராட்சி சாா்பில் வினாடி வினா போட்டி

image

சென்னை மாநகராட்சி சாா்பில், ‘சென்னை திருக்குறள்’ எனும் தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி, வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், 6, 7, 8, 9 வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரு அணிகள் பங்கேற்கலாம். போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.7,000, 2ஆம் பரிசு பெறுபவருக்கு ரூ.5,000, 3ஆம் பரிசு பெறுபவருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.

News September 2, 2024

ஃபார்முலா 4 கழித்த 100 மாணவ மாணவியர்கள் !!

image

இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஃபார்முலா 4 Chennai “Racing On the Street Circuit” போட்டி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த கார் ரேசிங் நிகழ்ச்சியை சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 100 மாணவர்கள் மற்றும் மாணவிகள் திமுக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமர்ந்து சீறி பாய்ந்து வரும் பந்தயக் கார்களின் ரேசிங் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

News September 1, 2024

சென்னை கார் பந்தய ட்ராக்கில் பழுதாகி நின்ற கார்

image

சென்னையில் ஃபார்முலா4 கார் பந்தையம் நடைபெற்றுவம் வரும் நிலையில், அதில் பங்கேற்ற பெங்களூர் அணியைச் சேர்ந்த துருவ்(27) என்ற வீரரின் கார் தொழில்நுடப கோளாறு காரணமாக காரின் டயர்கள் இயங்காமல் பந்தைய ட்ராக்கில் நின்றது. அதிவேகத்தில் கார்கள் வரும் வழியில் இவரது கார் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

News September 1, 2024

கமலாலயத்தில் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம்

image

கமலாலயத்தில் சிறுபான்மை அணி சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் இன்று(செப்.,1) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பாஜகவின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தலைமை ஏற்று நடத்தினார். பிரதமர் மோடி சிறுபான்மை மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி சிறுபான்மை சகோதர சகோதரிகளை பாஜகவின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

News September 1, 2024

சென்னையில் தினமும் 10 லட்சம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகள்

image

சென்னையில் தினமும் மாநகராட்சி மூலம் 62 லட்சம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் 10 லட்சம் கிலோ‌ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. தீவிர கண்காணிப்பை அதிகாரிகள் மேற்கொள்ளததால் இந்த மாதிரியான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மக்களிடையே புழங்குகின்றன‌ என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

சென்னையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

image

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 5:40 க்கு புறப்படும் ஜெய்ப்பூர் அதிவிரைவு ரயில் (12967), 6:40 க்கு புறப்படும் நியூ டெல்லி கிரண்ட் ட்ரங்க் விரைவு ரயில் (12615), ஆகிய ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்களில் பயணம் செய்யவிருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை ஷேர் செய்யவும்.

News September 1, 2024

கார் ரேஸை காண வரும் திரைப் பிரபலங்கள்

image

சென்னை தீவுத் திடலில் நடக்கும் பார்முலா 4 கார் ரேஸை கண்டு களிக்க, திரைப் பிரபலங்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். நடிகை திரிஷா, நாக சைதன்யா, அர்ஜுன் போனி கபூர் உள்ளிட்டோர் கார் ரேஸ் போட்டியை காண வருகிறார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் வருகை தந்துள்ளார். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீங்க போறீங்களா?

News September 1, 2024

கார் பந்தயத்தைக் காண வரும் சவுரவ் கங்குலி

image

சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள ஃபார்முலா கார் பந்தத்தை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பெங்கால் டைகர் ஃபார்முலா அணியின் உரிமையாளருமான சவுரவ் கங்குலி இன்று பிற்பகலில் போட்டியை காண வருகை தர உள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கங்குலியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!