Chennai

News September 2, 2024

அரச பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி வகுப்பு

image

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சர்வதேச மொழியை பயிற்று விக்க மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் சார்பில், சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேயர் பிரியா தலைமையில் கையெழுத்தானது. இந்நிலையில், முதற்கட்டமாக சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 20 மாணவர்கள் என 4 பிரிவுகளுக்கு விருப்பப் பாடமாக பிரெஞ்சுமொழி கற்றல் வகுப்பு தொடங்கியுள்ளது.

News September 2, 2024

சென்னையைத் தொடர்ந்து கூடுதல் பகுதிகளுக்கு தாழ்தள பேருந்துகள்

image

சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் தாழ்தள பேருந்துகள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. எனவே கூடுதலாக மேலும் 552 பேருந்துகள் உருவாக்கப்பட்டு சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

News September 2, 2024

குலுக்கல் முறையில் பயணிகள் தேர்வு

image

பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சாதாரண நாட்களில் அதிக பயணிகள் பயணம் மேற்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது. குலுக்கல் முறையில் 13 பயணிகளை பல்லவன் போக்குவரத்து கழக அறிவுரை பணிக்குழு தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்தார். இவர்களின் முதல் 3 பயணிகளுக்கு தலா 10,000 ரூபாயும் மற்ற 10 பயணிகளுக்கு தலா 2,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

News September 2, 2024

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார்

image

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் போக்குவரத்துக் காவல் துறையினர் ஆய்வு என்ற பெயரில் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் லாரிகளை நிறுத்தி வழக்கு போடுவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

News September 2, 2024

ரயில் நிலையத்தில் காவலரால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்த பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள தலைமை காவலரை 4 தனிப்படைகள் கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

News September 2, 2024

சென்னையிலிருந்து திருச்செந்தூர் சென்றவர் படுகாயம்

image

சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலின் படியில் அமர்ந்து காவலர் ஜெயக்குமார் பயணம் செய்துள்ளார். விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் இருவர் அவரது செல்போனை பறித்துவிட்டு காவலர் ஜெயகுமாரை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதையடுத்து பட்டம்புதூர் பகுதியில் தண்டவாளத்தில் கிடந்த காவலரை அப்பகுதி மக்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

News September 2, 2024

விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக் கோரி வழக்கு

image

திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், எளிதில் மக்கும் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 2, 2024

சென்னையில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை

image

சைதாப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள இறைச்சி கடைகளில் கொட்டுப்போன அரை டன் எடை கொண்ட இறைச்சி மற்றும் ஆட்டுக்கால்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி, கன்னியாகுமரியில் இருந்து கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும், சூப் விற்பனைக்கு ஆட்டுக்கால்கள் தீயில் வாட்டி சேகரித்து வைத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இதனை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

News September 2, 2024

சாலையோர வாகனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

சென்னை மாநகராட்சி சார்பில், சாலையோரம் நீண்ட நாட்களாக இருக்கும் வாகனங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், சாலைகளில் போக்குவரத்து மிகவும் எளிதாகிறது. இந்நிலையில், சாலையோரம் நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சென்னை மாநகராட்சியின் சமூக வலைத்தள பக்கங்களிலும், 1913 என்ற உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 2, 2024

உதவி செவிலியர் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், உதவி செவிலியர் பணியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2024-25ஆம் ஆண்டிற்கான மருத்துவ இணையவியல் படிப்பான 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்.9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகள் மற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

error: Content is protected !!