India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டுமானத்திற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுத்து நிறுத்தி கடலில் கலக்கும் உபரி நீரை இராசி மணலில் அணைக்கட்ட அப்போதைய முதல்வர் காமராஜர் முயற்சி செய்தார். அதனை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சென்னையில் செல்வப் பெருந்தகை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் 100 பேருக்கு யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்க, தமிழ்நாடு (TAHDCO) நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிக்கு தகுதி பெற, மாணவர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நேர்முக நுழைவு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு, www.tahdco.com என்று இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஈஞ்சம்பாக்கம், சாய் பாபா காலனியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது ஓட்டுநர் சுகுமாரன், அதேப் பகுதியில் உள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது மகன் ரீத்திஸ்(3), இன்று காலை வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார். குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி – மதியம் 2 மணி வரை அம்பத்தூர், ICF காலனி, அயப்பாக்கம், திருவேற்காடு, அத்திப்பட்டு, வானகரம், போரூர், ராமாபுரம், பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம், RA புரம், கிரீன்வேஸ் சாலை, பிஷப் கார்டன், செயின்ட் மேரிஸ் சாலை, அடையாறு கிளப் கேட் சாலை, பக்ஸ் சாலை, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ராயபுரம், திருவொற்றியூர், கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, மணலி, கோயம்பேடு, அம்பத்தூர், அசோக் நகர், வியாசர்பாடி, அயனாவரம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதிய தொகை ரூ.6000 பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 30 – ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான எஸ்.விஜயகுமார், 32-வது சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு எஸ்.கோவேந்தன் இப்பொறுப்பை வகித்தார். புதிய பாஸ்போர்ட் அதிகாரியான எஸ்.விஜயகுமார், இதற்கு முன்பு, ரோம், காபூல் மற்றும் தோஹாவில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில், பி.இ. பட்டம் பெற்றவர் ஆவார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE’ திட்டத்தில் புதிதாக மாரியப்பன் தங்கவேலு, ராஜேஷ் ரமேஷ், வித்யா ராமராஜ், துளசிமதி முருகேசன், பிருத்விராஜ் தொண்டைமான், வைஷாலி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ELITE திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீரருக்கும், அவர்களின் பயிற்சி மற்றும் உபகரணத் தேவைகளுக்காக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் Internal Complaints Committee அமைக்கப்படும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தை அறவே ஒழித்திட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகளில் வெளியாட்கள் பணிகளுக்காக உள்ளே வந்தால் அவர்களுடன் கல்லூரியைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து கவனிக்க வேண்டும்” என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் ஆகஸ்ட் 26 – ந் தேதி காலமானார். இந்நிலையில் அவரது இறப்பு சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டது. சான்றிதழ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டு அலுவலகம் அவரது குடும்ப ஓய்வூதியத்திற்கு துரித நடவடிக்கை எடுத்து, அதற்கான ஆணையை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் இன்று ஜெனரலின் மனைவியிடம் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.