Chennai

News September 3, 2024

ரயிலில் நூதன திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள் கைது

image

சென்னையில் ஓடும் ரயில்களில் துப்பட்டாக்களை வீசி நகைகளை கொள்ளை அடிக்கும் சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே காவல்நிலையத்தினர் கைது செய்துள்ளனர். ஒசூரைச் சேர்ந்த கண்மணி, ரேகா சகோதரிகள் கூட்ட நெரிசலில் ஏறும் பெண்களின் மீது துப்பட்டாவை வைத்து மறைத்து, கழுத்தில் உள்ள நகையை திருடி வந்துள்ளானர்; 14 வழக்குகளில் தொடர்புடைய இவர்களிடம் 12 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்துள்ளனர்.

News September 3, 2024

தீவுத்திடலில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்

image

சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற ChennaiFormula4 Car Racing on the Street Circuit போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றன. இந்நிலையில், இப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த கேலரி, ஸ்டாண்ட், தடுப்புகள் போன்ற தற்காலிக அமைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News September 3, 2024

சென்னையில் மின்சார ரயில்கள் இன்று ரத்து

image

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7:55, 10:55 நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் இரவு 10:20 க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

News September 3, 2024

மேயருடன் ஆலோசனை நடத்திய கர்நாடக துணை முதல்வர்

image

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா ராஜன் உடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது துணை மேயர் மகேஷ் குமார் நகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 3, 2024

பாமக தலைவரை சந்தித்த காவிரி விவசாய சங்கத்தினர்

image

சென்னை திநகர் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதில், காவிரியின் கடலில் கலக்கும் உபரி நீரைத் தடுத்து நிறுத்த ராசிமணல் அணைக்கட்டுமானம் துவங்கிடவும், மேகதாட்டு அணை கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்திட ஆதரவு கோரியும், பி.ஆர்.பாண்டியன் ஆதரவு கோரி, அன்புமணியிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்.

News September 3, 2024

தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

image

விநாயகர் சதுர்த்தி வரும் 7 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது (06039) நாளை இரவு 10:25 க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் (06040) திருநெல்வேலியில் இருந்து நாளை மறுநாள் இரவு 10:20 க்கு புறப்படும்.

News September 3, 2024

புதிய சென்னை காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை

image

சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கடந்த 2 மாதங்களில் 150 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதில் கொலை மற்றும் கொலை முயற்சி செய்த 32 குற்றவாளிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News September 3, 2024

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்

image

சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகே 2 கல்லுரிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டனர். இருதரப்பு மாணவர்களும் மாறி மாறி கற்களால் தாக்கி கொண்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பேருந்துகளில் செல்லும் போது இரு கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது மோதிக்கொள்வது சென்னையில் தொடர்கதையாகி வருகிறது. ரூட்டு தல என்ற கலாச்சாரமும் மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதும் இதன் காரணமாக உள்ளது.

News September 3, 2024

பணியில் இருந்த போலீஸ் ஏட்டு உயிரிழப்பு

image

மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(59). இவர், மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இன்று,மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே போலீஸ் வாகன சோதனை பூத்தில் பணியில் இருந்த இவர், பூத்தில் மயங்கிய நிலையில் இருப்பதாக சாலையில் சென்ற வாகன ஒட்டிகள் மீனம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர். மருத்துவமனையில் சோதனை செய்தபோது, மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News September 3, 2024

நவீனமயமாகும் ‘அம்மா உணவகங்கள்’

image

சென்னையில் உள்ள 393 அம்மா உணவகங்களை நவீனப்படுத்த மற்றும் விற்பனையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் ஆஃப்லைன் இ-பில்லிங் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. சமீபத்தில், அம்மா உணவகத்தை ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். இதனால், பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.

error: Content is protected !!