India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு நியாய விலைக் கடைகளில் எஃப்.பி.எஸ் (FPS) செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் என்றும், நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த ரேஷன் ஊழியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், நாளை மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரிக்கு, இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், கல்லுரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் போலீசார் வந்து தீவிரமாக சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளாகி 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவளம் அருகே உள்ள செம்மஞ்சேரியில் நடந்த இந்த விபத்தில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று லோடு வேன் மீது மோதியது. கார் வேனுக்கு அடியில் சிக்கியதால், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், ராயபுரம், திருவொற்றியூர், மணலி, வியாசர்பாடி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, கோயம்பேடு, போரூர், திருவான்மியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததோடு, பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியது. உங்க ஏரியாவில் மழை பெய்ததா?
சென்னை புழல் மத்தியச் சிறை -1இல் உள்ள சமையலர், ஓட்டுநர், போதகர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.09.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலர் -1 (பொன்னேரி கிளைச்சிறை), லாரி ஓட்டுநர் -1 (புழல் மத்தியச் சிறை-1), நெசவு போதகர் -1 (புழல் மத்தியச் சிறை-1)
மாநில அளவிலான பள்ளி ஹாக்கி லீக் போட்டி நிறைவு விழா சென்னை, எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில், செப்டம்பர் 3, 5 ,7 ஆகிய தேதிகளில் இரவு 10:40, 11:20, 11:40 ஆகிய நேரங்களில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் மறு மார்க்கத்தில் இரவு 9:10, 9:30-க்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், செப். 4, 6, 8 ஆகிய தேதிகளில் காலை 4:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள கர்நாடக மாநில துணை முதல்வர் வி கே சிவகுமார் இன்று சென்னை வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் உடனிருந்தார்.
புதுடெல்லியில் இருந்து நாளை சென்னை சென்ட்ரல் புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் (12622), தாம்பரத்திலிருந்து சான்ட்ரா காச்சி செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் (22842) மற்றும் இன்று மாலை 7:15 க்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் (12840) ஆகிய 3 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டைச் சேர்ந்த சங்கர், ஜெயலட்சுமி ஆகியோர் தங்களுடைய நிலத்தின் மீது செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றியமைக்க ரூ.81 லட்சம் கேட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தனி நபர்களின் வீடு, நிலங்கள் பாதிக்காத வகையில் உயர் மின் அழுத்த கோபுரங்கள், கேபிள்கள் அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.