Chennai

News September 4, 2024

புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் ராஜஸ்தானில் இருந்து வருகை

image

சென்னையில் இயக்க 500 தாழ்தள பேருந்துகளை, அசோக் லேலண்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலையில், இந்த வகை பேருந்து தயாரித்து அனுப்பப்படுகின்றன. முதல்கட்டமாக, 58 பேருந்துகள் சென்னை வந்து, பயணியரின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 450 பேருந்துகளும் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

News September 4, 2024

குவாட்டருக்கு ரூ.10 கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

image

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு ரூ.10 வீதம் கூடுதல் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக, டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள மதுக்கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10க்கு மேல் விற்ற 50 ஊழியர்கள் சிக்கினர். அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2024

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சொந்த ஊர்கள் செல்வோருக்காக கிளாம்பாக்கத்திலிருந்து வரும், செமப்.5,6,7-ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 725 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News September 4, 2024

சென்னையில் விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்

image

விநாயகர் சதூர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே வரும் செப்.6, 8, 13, 15, 20, 22 ஆகிய தேதிகளில் இரவு 7:30 மணிக்கும், கொச்சுவேலி – தாம்பரம் இடையே 7, 9, 14, 16, 21, 23 ஆகிய தேதிகளில் மாலை 3.35 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதே போல், சென்னை – கோவை இடையே செப்.6-இல் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.45 மணிக்கு சிறப்பு ரயில் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News September 4, 2024

ஆளுநரை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்

image

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் தமிழக ஆளுநர் ரவிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி சிறப்பித்தார். இவர்களது இந்த திடீர் சந்திப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சந்திப்பின் காரணம் உங்களுக்கு தெரியுமா?

News September 4, 2024

மழைக்கால பணிகளுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்

image

சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மழை கால பணிகளுக்கு தான் முன்ணுரிமை அளிக்க வேண்டும். மழை நீர் வடிகால்வாய் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். மழை காலத்தில் தொடர்ந்து இயங்க வெளியூரில் இருந்து மோட்டார்கள்(pumping motor) முன்கூட்டியே கொண்டு வர வேண்டும்” என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

News September 4, 2024

முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை

image

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன்(29). இவர், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். நேற்றிரவு மருத்துவ கல்லூரி அறைக்கு தூங்க சென்ற அவர், காலையில் வெகு நேரமாகியும் அறை கதவை திறக்கவில்லை. இதனால், அவரது நண்பர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் இறந்த நிலையில் கிடந்தார். அருகில் ஊசி (சிரிஞ்ச) ஒன்று கிடந்தது குறிப்பிடத்தக்கது.

News September 4, 2024

ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் வகுப்பறைகள்: அன்புமணி

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும்” என்றார்.

News September 4, 2024

அமெரிக்காவில் சென்னையைச் சேர்ந்த பெண் பலி

image

சென்னையைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன் உட்பட 4 பேர், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வாடகை செயலி மூலம் கார் புக் செய்து அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். கார், காலின்ஸ் கவுண்டி என்ற பகுதியில் செல்லும்போது வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இதனால், காரானது தாறுமாறாக ஓடி கவிந்தது. இதில், அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதியதில் காரில் தீ பற்றி எரிந்தது. 4 பேரும் உடல் கருகி இறந்தனர்.

News September 4, 2024

சென்னையில் உலகளாவிய திறன் மையம்

image

ஈட்டன் நிறுவனத்துடன் ரூ.200 கோடி முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

error: Content is protected !!