India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் காந்தி மண்டப வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம், G.O.A.T படத்தில் TN 07 CM 2026 என நெம்பர் பிளேட் வைத்தது ஏன்,? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 2026 இல் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான நோக்கத்தில் தான் அப்படி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக விடுதியில் சென்னையை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி விடுதியில் தங்கி சட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் டிஃப்பிரிலேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இலவச முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் 24/7 சேவை அளிக்கப்படும் என சென்னை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான அவசர உதவிக்கு 044-40006000 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்ய நேற்று ஒரே நாளில் 35,140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் 35,140 பேர் முன்பதிவு செய்தது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முன் 2018 ஜன.12-இல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்து அரசுப் பேருந்தில் பயணம் செய்திருந்திருந்தாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின் வெளியான முதல் திரைப்படமான ‘தி கோட்’ படத்தில் TN 07 CM 2026 என்ற எண் கொண்ட காரை படம் முழுக்க விஜய் பயன்படுத்துவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ‘2026-இல் தமிழக முதல்வர்’ என்பதை மறைமுகமாக எடுத்துரைக்கும் வகையில் இந்த கார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்களும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன?
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “எங்களிடம் தான் சனாதனத்தை பார்த்தார்கள் என்றால் தற்பொழுது விஜய்யிடமும் சனாதனத்தை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் ஆகியவரால் ஆட்சியை ஓட்ட முடியாது என்பதால் சைக்கிளை ஓட்டுகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இதுவரை 19,854 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. SETC பேருந்துகளில் பயணம் செய்ய சென்னையில் இருந்து 7,856 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்.29 அன்று 10,542 டிக்கெட்டுகளும், அக்.30 அன்று 9,402 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
வடசென்னை அதி உயர் அனல் மின்நிலையம் குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேறறுவதுடன் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். மார்ச் மாதம் தொடங்கிய வடசென்னை அதி உயர் அனல் மின்நிலையம்- 3, அதன்பின் 6 மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை” என குற்றம்சாட்டினார்.
விஜய் நடித்துள்ள GOAT படத்தின் டிக்கெட், 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “டிக்கெட் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் கையாலாகாத தனம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆசிரியர்கள் வீதியில் வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.