India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அதிக அளவில் கும்பாபிஷேகங்களை நடத்திய பிரபல ஜோதிடர் மகேஷ் மற்றும் பிரபல ஆச்சாரியார் சபாரத்தினம் இன்று பாஜகவில் இணைந்தனர். முன்னாள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில், இருவரும் தங்களை அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்த இருவருக்கும், அடிப்படை அடையாள உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பள்ளியில் மாணவர்கள் உணர்ச்சி பெருக்கோடு இருக்கக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மகாவிஷ்ணுவின் ஆன்மீக உரை சர்ச்சையான நிலையில், இன்று அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “யார் வந்தாலும் விசாரிக்க வேண்டும். பள்ளிக்கு வருபவரின் பின்னணியை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கு யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது? என்பதில் ஆசிரியர்களுக்கு தெளிவு வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் மோதல், ரகளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய மாணவர்கள் பட்டியலை சேகரித்து, அவர்களது வீட்டுக்கு போலீஸார் சென்று பெற்றோரை வைத்து கவுன்சலிங் அளிக்க உள்ளனர். சிறார்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில், சென்னையில் இயங்கும் 67 போலீஸ் பாய்ஸ் கிளப்களுக்கு புத்துயிரூட்டும் பணிகளும் நடந்து வருகிறது என சென்னை மாநகர ஆணையர் அருண் கூறியுள்ளார்.
நந்தனம், சிஐடி நகர் 4ஆவது சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில், ஒரு மாத பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகே இருந்த கலியபெருமாள் என்பவர் சென்று பார்த்துள்ளார். குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். சைதாப்பேட்டை போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பெண் ஒருவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்றதை கண்டுபிடித்தனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, போரூர், மணலி, கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், வியாசர்பாடி, ராயபுரம், திருவொற்றியூர், எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். உங்க ஏரியாவில் மழையா?
பாரீஸ் நகரில் நடைபெற்ற Paralympics2024-ல் இந்தியா சார்பில் பங்கேற்று Para-Badminton பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்நிலையில், தாயகம் திரும்பியுள்ள அவர்களை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் சந்தித்து நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், 90 சதவீத விசாரணை முடிந்து விட்டதாகவும், விரைவில் கொலைக்கான காரணத்தை தெரிவிப்போம் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காந்தி மண்டப வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம், G.O.A.T படத்தில் TN 07 CM 2026 என நெம்பர் பிளேட் வைத்தது ஏன்,? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 2026 இல் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான நோக்கத்தில் தான் அப்படி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக விடுதியில் சென்னையை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி விடுதியில் தங்கி சட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.