India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியானது. இதுகுறித்து பேசிய அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், “ரேஷன் கடைகளுக்கு மானியத்தை ஒதுக்காமல், பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் ஊதியத்தை வழங்க கூறியவர், கூட்டுறவுத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என்றார்.
கூடுவாஞ்சேரியில் இரவு 8.55(40202), 10.10(40206), 10.25(40208) மற்றும் 11.20க்கு(40210) புறப்படும் தாம்பரம் ரயில்கள் செப் 9-ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்படுகிறது எனவும், மேலும் மூர் மார்க்கெட்டில் நன்பகல் 12.10க்கு புறப்படும்(42017) கும்மிடிப்பூண்டி ரயில், சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் -திருவள்ளூர்-ஆவடி இடையே செப்.9ஆம் தேதி முதல் 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செப்.9ஆம் தேதி முதல் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து வரும் 9ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாதத்திற்கு ஒரு முறை மின் பராமரிப்பு செய்வது வழக்கம். அந்த வகையில், நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது. அந்த வகையில், டவுன் பொன்னேரி பேஹோடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க.
சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் மகா விஷ்னு ஆன்மீக சொற்பொழிவாற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் விசாரணை நடத்தியிருந்தார். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் வரும் திங்கட்கிழமை அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6:40 மணிக்கு புறப்பட்டு நியூ டெல்லி செல்லும் கிரண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் (12615) இணை ரயில் தாமதம் காரணமாக 1 மணி 20 நிமிடம் தாமதமாக இன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்காகத்தான் மாற்று திறனாளிகளாகவும், குற்றவாளிகளாகவும் பிறந்ததாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மகா விஷ்ணுவை கைது செய்ய புகார் அளித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கவும் விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழகம் முழுவதும் நாளை (செப்.7) விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் மற்றும் 2,000 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், சென்னையில் 2,000 மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1,519 விநாயகர் சிலைகள் அமைப்பதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.