Chennai

News September 8, 2024

நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி கொடுத்தார்: கார்த்தி

image

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது நின்றதால், சுமை கூடுதலாக அதிகரித்துள்ளது என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். “சென்னையில் எந்த திருமண மண்டபத்திலும் இல்லாத அளவில் நடிகர் சங்க கட்டிடத்தில் 100 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது. நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ரூ.1 கோடி சங்கத்திற்கு கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து நடிக்க உள்ளனர்.

News September 8, 2024

INDvsBAN: டெஸ்ட் போட்டி டிக்கெட் விற்பனை

image

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9.45 மணிக்கு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்டில் குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.1,000, அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.15,000 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டிக்கெட்டுகளை இந்த <>லிங்கில் <<>>பெறலாம்.

News September 8, 2024

எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

image

சென்னை, கடலூர், எண்ணூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல ராமேஸ்வரம், பாம்பன், குளச்சல், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 8, 2024

யார் இந்த ‘ஆசிரியர் சங்கர்’ ?

image

மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக ஒலித்த ஒரு ஆசிரியரின் குரல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியர் சங்கர், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் (மாற்றுத்திறனாளிகளில்) மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததோடு, BA, MA, B.Ed, பகுத்தறிவில் P.hD ஆகிய படிப்புகளை முடித்துள்ளார். இவரது, கல்வி கற்றலின் பகுத்தறிவு தான், மறுஜென்மம் போன்ற பிற்போக்குத்தனமான பேச்சுக்கு எதிராக குரல் கொடுக்க வைத்துள்ளது.

News September 8, 2024

பெசன்ட் நகர் கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

image

பெசன்ட் கடற்கரையில், கத்தியால் குத்தி ஒருவரை கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயராஜ் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஓட்டேரியை சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 8, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 10 போ் மீது குண்டா் சட்டம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் 10 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், இதுவரையில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதில், பொன்னை பாலு (39), அருள் (32), ராமு (38), திருமலை (45) உள்ளிட்ட 10 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.

News September 7, 2024

அசோக் நகர் பள்ளிக்கு வந்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

image

அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பேச்சாளரின் சொற்பொழிவு குறித்து சென்னையில் பேசிய பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.சித்ரகலா மற்றும் உறுப்பினர்கள், “நிகழ்ச்சிக்கும் பள்ளி மேலாண்மை குழுவிற்கும் எந்த தொடர்பில்லை. இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

News September 7, 2024

ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

image

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் 10.09.2024 அன்று 31 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து நேற்று தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் டிட்டோஜாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மூன்று நாட்களில் போராட்டத்தை கையில் எடுக்கவுள்ளதாக பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

News September 7, 2024

சைதாப்பேட்டை காவல் நிலையம் முன்பு போலீசார் குவிப்பு

image

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் விசாணைக்கு பின்னர் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவதால் காவல் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு. சைதாப்பேட்டை மட்டுமல்லாமல் முக்கிய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News September 7, 2024

ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு

image

சென்னை பரங்கிமலையில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியா மட்டுமல்லாது அதன் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிப்பவர்களுக்கு நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

error: Content is protected !!