Chennai

News March 27, 2024

வேட்பு மனு தாக்கல் செய்த தயாநிதிமாறன்

image

மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News March 27, 2024

சென்னை: நேற்று மட்டும் ரூ.1.42 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

News March 27, 2024

சென்னையில் பால் விநியோகம் தாமதம்!

image

சென்னையில் இன்று(மார்ச் 27) பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், கொரட்டூர், மயிலாப்பூர், வில்லிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். மேலும், இத்தகைய தாமதத்திற்கு வருந்துவதாகவும் ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

News March 27, 2024

சென்னை: I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூர் எவர் வின் பள்ளி வளாகத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிடோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

News March 26, 2024

சென்னை: கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள்

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் இல்லத்தில் திமுக வேட்பாளர்கள் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அருகில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா , சிற்றரசு உட்பட பலர் இருந்தனர்.

News March 26, 2024

சென்னையில் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம்

image

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

News March 26, 2024

சென்னை: டி.ஆர் பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.பி டி.ஆர்.பாலுவை, அமைச்சர் சேகர்பாபு இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், காரப்பாக்கம் கணபதி மற்றும் பகுதி செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.

News March 26, 2024

சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு

image

சென்னை குடிநீர் வாரியத்துக்கு, நிகழாண்டின் 2ம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களை செலுத்த ஏதுவாக, வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும் என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

News March 26, 2024

சென்னை: 70ஐ தாண்டும் வேட்பு மனு தாக்கல்?

image

சென்னையில் 3 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மார்ச் 20ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உற்சாகமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

News March 26, 2024

சென்னை: ரூ.5.26 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மார்ச் 16 முதல் இதுவரை நடைபெற்ற அதிரடி சோதனையில் மொத்தமாக ரூ.59.13 லட்சம் ரொக்கமும், ரூ.5.26 கோடி மதிப்பிலான 7,999 கிராம் தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.