Chennai

News September 9, 2024

ரூ.1,65,000 தங்கச் செயினை ஒப்படைத்த தூய்மை பணியாளர்

image

அடையாறில் உள்ள பரமேஸ்வரி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் காமக்ஷி சந்தானம். இவர், தனது ரூ.1,65,000 மதிப்புள்ள தங்கச் செயினைத் தவறுதலாக அவருடைய வீட்டின் குப்பையில் தவறவிட்டுள்ளார். அது அப்படியே குப்பை கிடங்கிற்கு சென்றது. குப்பைகளை தரம் பிரிக்கும்போது தூய்மை பணியாளர் பாலு, அதனை கண்டு பிடித்தார். பின்னர், செயின் யாருடையது என்பது குறித்து விசாரித்து அதனை காமக்ஷி சந்தானத்திடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

News September 9, 2024

ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை

image

பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9.30 மணியளவில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைக்க உள்ளார். இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

News September 9, 2024

மாநகராட்சியுடன் இணைக்கும் பணி தீவிரம்

image

சென்னை மாநகராட்சியின் வருவாய், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் திருப்போரூர், சோழிங்கநல்லூர், மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தெரிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

News September 9, 2024

மேல் முறையீட்டு வழக்கு விசாரணை பிற்பகல் நடைபெறும்

image

சென்னை ரேஸ் கிளப் 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்து வாடகை பாக்கி ரூ.780 கோடி நிலுவையில் உள்ளாதால் இன்று அக்கிளப்பிற்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை பிற்பகலில் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

News September 9, 2024

அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

image

ஏஞ்சல் படத்தை முடித்து கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு கோரி பட தயாரிப்பாளர் ராமசரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

News September 9, 2024

நியாயவிலைக்கடை பொருட்களை கடத்தினால் கடும் நடவடிக்கை

image

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மழைக்காலத்திற்கு முன்னதாக தாழ்வான பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளை மேடான பகுதிக்கு மாற்றவும், தேவையான பொருட்களை ஸ்டாக் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நியாயவிலைக்கடை பொருட்களை கடத்தல் சம்பவங்களில் அதிகாரிகள் உள்ளிட்ட யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

News September 9, 2024

கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

image

திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது பையை சோதனை செய்ததில் அவரிடம் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மதுரை தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அரவிந்தசாமி என்பதும் கஞ்சா வாங்க ஆந்திரா சென்றதும் தெரியவந்துள்ளது.

News September 9, 2024

டெங்கு வீரியத்தை கண்டறிய புதிய ஆய்வகம்

image

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. டெங்கு வீரியத்தை கண்டறிய ஒரு ஆய்வகத்தை திறந்து வைக்க இருக்கிறோம், டெங்கு வீரியம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கூடிக் கொண்டிருக்கிறது, இதற்கான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செய்கின்றன” என்றார்.

News September 9, 2024

வாடகை பாக்கி நிலுவையால் கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்

image

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப், வாடகை பாக்கி நிலுவையை செலுத்தாததால் சீல் வைக்கப்பட்டுள்ளது. பல மாத வாடகை பாக்கி நிலுவைத் தொகையான ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு கையகப்படுத்த நீதிமனரம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மருத்துவர் கருவிகள்

image

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்ட சேவைகளையும் கருவிகளையும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு திட்டங்களை செயல்முறைக்கு கொண்டு வந்தார்.

error: Content is protected !!