India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டில் வழக்கமாக 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் இந்த கல்வியாண்டில் 220 நாட்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12 முதல் தொடங்குகிறது. பயணிகள் வசதிக்காகவும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே ஐஆர்சி இணையதளம் மூலமாகவும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என சென்னை தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணங்கள் மேற்கொள்வோர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டி ஐ ஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், விசாரணைக்காக சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு விரைந்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் இன்றும், வேலூரில் நாளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, இன்றும் (1 கிலோ) தக்காளி ரூ.25, கேரட் ரூ.90, வெங்காயம் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.75, எலுமிச்சை ரூ.110, பீன்ஸ் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமானால், விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹமீது என்பவரிடம் சோதனை செய்ததில் ரூ.10 லட்சம் பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்காத நிலையில் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் கணக்கில் வராத இந்த பணம் ஹவாலா பணமா? எவ்வாறு இந்த பணம் வந்தது என பாண்டி பஜார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து, அவர்கள் இன்று (செப்.10) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. ‘சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 177 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாக்காளர்களிடம் தகவல் தெரிவிக்காமல் ஆயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி புகார் அளித்திருந்தார். இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது. சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது” என விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸுக்கான குத்தகையை ரத்து செய்து அரசாணை வெளியிட்டு, அந்த நிலத்தைக் கையகப்படுத்த சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஸ் கோர்ஸ் மைதானம் பொதுப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.730 கோடி அளவுக்கு அரசுக்கு வரி பாக்கி வைத்திருந்த நிலையில், இன்று (செப்.9) ரேஸ் கோர்ஸ் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவு அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவரை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மேலும் 3 காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Sorry, no posts matched your criteria.