Chennai

News April 2, 2024

சென்னை:மீன் வியாபாரியிடம் பணம் பறிமுதல்!

image

காசிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரி தமிழரசன் போலீசார் உடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டை சேர்ந்த குமார் என்பவர் மீன் வியாபாரத்திற்காக மீன் வாங்க ரூபாய் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளார்.பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்திற்கு அனுப்பி உள்ளனர்.

News April 1, 2024

சக கைதியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

image

புழல் மத்திய விசாரணை சிறையில், கஞ்சா வழக்கில் கைதான எண்ணூரை சேர்ந்த கார்த்திக் 23 ராஜேந்திரன் 31 அயனாவரம் லோகு 23 ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் இவரது செருப்பு காணாமல் போனதால் மற்றொரு கைதியான அமைந்த கரையை சேர்ந்த முகமது அமான் 43 என்பவர் திருடியதாக கூறி மூவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் முகமது அம்மானை தாக்கிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 1, 2024

குளுகுளு மழை..சென்னை கிளைமேட் என்ன..?

image

இன்று தென்தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2024

சென்னை: நடிகை மீது கொலை மிரட்டல் புகார் 

image

பிரபல சினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீ தேவிக்கும்  சரண்யாவுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரின் மீது ஸ்ரீதேவி கார் உரசியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

News April 1, 2024

சென்னை வானிலை மையம் அறிக்கை

image

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி , குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

News March 31, 2024

வாக்கு சேகரிப்பில் குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ்

image

குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து பெண் ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து கோபாலபுரத்தில் நடிகை குஷ்பு வாக்கு சேகரித்தார். அப்போது பால்கனியில் நின்ற பெண் ஒருவர் குஷ்புவை பார்த்து கை காட்டினார். பதிலுக்கு குஷ்புவும் கையசைத்தார். இதனால் உற்சாகமான அந்த பெண் அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

News March 31, 2024

சென்னை: வெளியே செல்லும் முன் கவனம்..எச்சரிக்கை

image

31.03.2024 முதல் 04.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News March 31, 2024

சென்னையை சேர்ந்தவர் மலையேறும் போது உயிர் இழப்பு

image

கோவை வெள்ளியங்கிரிமலைக்கு சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உட்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் உடல் முறையாகபரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 31, 2024

வடசென்னை தென் சென்னைக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரம்

image

தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். 

News March 31, 2024

கருணாநிதி நினைவிட ஒளி ஒளிகாட்சி நிறுத்த கோரிக்கை

image

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் பற்றி புகார் கொடுத்துள்ளார் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உள்ள அந்த ஒலி-ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார் .