Chennai

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

சென்னை: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் – அபராதம்!

image

சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் மின்சார ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எழும்பூர், மாம்பலம், கிண்டி ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். தினந்தோறும் சில்லரை வியாபாரிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், சோதனை நடைபெற்று டிக்கெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News April 3, 2024

சென்னையில் குடிநீர் தேவை அதிகரிப்பு 

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இந்த அளவிலேயே குடிநீர் தேவை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது. 

News April 3, 2024

யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி

image

ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் UPI மூலமாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் ஏப்.1 முதல் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைய முன்பதிவில்லாத கவுன்டர்களில் டிக்கெட்டுக்கான பணத்தை UPI மூலம் செலுத்தலாம். மேலும் சென்னை கோட்டத்தில் சில ரயில் நிலையங்களி இந்த வசதி சோதனை அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

News April 3, 2024

வள்ளலார் சர்வதேச மையம்: அரசு பதிலளிக்க உத்தரவு

image

சத்திய ஞானசபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்க கோரி பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவான தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு ஏப்.,24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News April 3, 2024

சென்னையில் 2 இடங்களில் சிபிஐ சோதனை

image

சென்னை, அயனாவரம் உட்பட 2 இடங்களில் உள்ள வங்கி அதிகாரிகளின் வீடுகளில் இன்று(ஏப்.3) சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சூளைமேடு, பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 3, 2024

சென்னை: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

image

சென்னை, கதீட்ரல் சாலை அமராவதி ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலை பாதாள சாக்கடை மேன்ஹோல் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கண்ட இடத்தில் 7 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று(ஏப்.3) முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News April 2, 2024

ELECTION: சந்தேகம் இருக்கா?

image

மக்களவைத் தேர்தல்-2024 ஏப்.19ம் தேதி, தமிழ்நாட்டி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். அதே போன்று தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளது. உங்களுக்கு தேர்தல் குறித்த சந்தேகம், உதவிகள் தேவைப்படின் ‘1950’ என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற எண்ணுக்கும் அழைக்கலாம்.

News April 2, 2024

₹ 1, 800 கோடி வசூலித்த சென்னை மாநகராட்சி

image

பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் சொத்து வாரியாக மட்டும் ரூ. 1, 800 கோடி வசூலாகி உள்ளது.

News April 2, 2024

சென்னைக்கு வருகை தந்துள்ள துணை ராணுவ வீரர்கள்

image

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று முதல் வருகை தர உள்ளனர். இவர்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையிலும் பதட்டமான வாக்கு சாவடியில் கண்காணிக்க உள்ளனர் இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.