Chennai

News September 12, 2024

திருப்பூரில் விசாரணை முடிந்ததும் சென்னை அழைத்து வரப்படும்

image

அசோக் நகர் பள்ளியில், சர்ச்சை பேச்சில் சிக்கிய மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவின் அறக்கட்டளைக்கு சொந்தமான பரம்பொருள் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையை முடித்துக் கொண்டு நாளை மகாவிஷ்ணுவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.

News September 12, 2024

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

image

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி நியூ டவுண், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில்நகர், வெள்ளிவயல், நாப்பாளையம், செம்மணலி, ஐயப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், சின்ன போரூர், வானகரம், பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், பெரிய கொளத்துவாஞ்சேரி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

News September 12, 2024

கோயம்பேடு மார்கொட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

image

கோயம்பேடு காய்கறி சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, இன்றும் (1 கிலோ) தக்காளி ரூ.25, கேரட் ரூ.85, வெங்காயம் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.80, எலுமிச்சை ரூ.100, பீன்ஸ் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமானால், விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 12, 2024

போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்

image

தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13, 14 ஆகிய நாட்களில் 955 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News September 12, 2024

வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்திய புஸ்ஸி ஆனந்த்

image

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்காக பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதலே அரசியல் கட்சி தலைவர், பொதுமக்கள், சங்கத்தினை சேர்ந்தவர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய வருகின்றனர். அந்த வகையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மாலை அணிவித்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

News September 11, 2024

தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

முகூர்த்தம், மிலாடி நபி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 13, 14, 15 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், 13, 14 ஆகிய 2 நாட்களுக்கு 955 பேருந்து, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூரு 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News September 11, 2024

ஐடிஐ மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. எம்.எம்.வி., மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர், டர்னர், பெயின்டர் ஆகிய பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 11, 2024

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்

image

மாற்றுத்திறனாகிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்த விசாரிக்க சைதாப்பேட்டை போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகாவிஷ்ணு அழைத்து செல்லப்பட்டார். அரசுப் பள்ளியில் பிற்போக்கு கருத்துகளை பேசியதாக மகா விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News September 11, 2024

சென்னையில் 30 பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

image

இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை செய்தனர். அப்போது பயணிகள் உரிய வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட பொருட்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் உரிய வரி செலுத்தாத பொருட்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News September 11, 2024

பாடகர் மனோவின் மகன் மது போதையில் ரகளை

image

சென்னை வளசரவாக்கத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன் மது போதையில் அருகில் இருந்தவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. பாடகர் மனோவின் மகன் தாக்கியதில் காயம் அடைந்த நபர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மனோ மற்றும் அவரது மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!