India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் எதிரொலியாக வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன், வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், உறுப்பினர்களுக்கு வீடு கட்ட பெற்ற வங்கி கடன் மற்றும் சங்க நிதியான ரூ.3 கோடியை முறைகேடு செய்திருப்பதாக அச்சங்கத்தின் உறுப்பினர் சுயம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், புகார் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டது.
கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக துணை இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நடப்பாண்டில் பொருளியல் படிப்பில் மட்டும் 15,000 கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்றும், இன்னும் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், கூடுதல் மாணவர்கள் சேருவார்கள் எனவும், கல்லூரியின் சேர்க்கை இந்த மாதம் 23ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னையில் குப்பை தேக்கத்தை தடுக்கும் வகையில், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், ரூ.1,248 கோடி மதிப்பில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, தினமும் 42 மெகா வாட் மின்சாரம் 80 கிலோ வாகன பயன்பாட்டிற்கான எரிவாயு தயாரிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக கட்டடம், சுற்றுச்சுவர் எரி உலைகள் போன்றவற்றிற்கு ரூ.848 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் தோன்றியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “படத்தில் அப்பா தோன்றிய காட்சியை ரசித்து பார்த்தேன். AI தொழில்நுட்பம் மூலம் அப்பாவை காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் தோன்றிய காட்சியை வெங்கட்பிரபு நன்றாக இயக்கியிருக்கிறார்” என்றார்.
சென்னை அசோக் நகர் பள்ளியில் அவதூறாக பேசிய வழக்கில் கைதான சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாக சென்னை திருவொற்றியூர் போலீஸ் வழக்கறிஞர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர். சர்ச்சை பேச்சில் சிக்கி கைதான நிலையில், மகாவிஷ்ணு மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை புழல் சிறையில் வழக்கம் போல் சிறை அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் இன்று காலை சோதனை செய்தனர். சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கஞ்சா எப்படி சிறைகளுக்குள் கொண்டுவரப்பட்டது இதற்கான காரணம் யார் என அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், “13 ஆண்டுகளாக போராட்டத்தை நடத்தி வருகிறோம், ஆனால் தற்போது எந்த முன்னேற்றமும் இல்லை. அனைவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே ஒரே கோரிக்கை” என்றனர்.
சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தை சேர்ந்த அபிநயா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் இதற்கு முன்பாக 2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்தார். இந்த சாதனையை அபிநயா முறியடித்துள்ளார்.
சென்னை ஐஐடி வேளச்சேரி நுழைவு வாயில் முன்பாக பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் 6ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 20கிமீ வேகத்தில் சென்றால் ₹10,000 அபராதம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.