Chennai

News September 13, 2024

பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனைகள்

image

சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீளம் தாண்டுதல் போட்டியில் பெண் வீராங்கனைகள் பிரதிக்ஷா 5.79மீ நீளம் தாண்டி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். மேலும் லக்ஷன்யா 5.75மீ நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றார். இந்த இரண்டு பெண் வீராங்கனைகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2024

தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

image

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு தக்காளி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக், கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தக்காளியை ஏற்றிக்கொண்டு திருப்பதி அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. லாரி கவிழ்ந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News September 13, 2024

ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கல்

image

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு பிரச்னையை சரி செய்ததால், ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. உங்க ஏரியாவில் கரண்ட் வந்துடுச்சா? கமெண்ட் பண்ணுங்க.

News September 13, 2024

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

image

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் காவல்துறை விசாரணை முறையாக இல்லை என்றும் வழக்கில் முக்கிய நபராக உள்ள புவனை ஏன் கைது செய்யவில்லை?. மேலும் போலி என்.சி.சி. முகாமில் 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கிகள் அங்கு எப்படி வந்தது?, துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்தார்களா? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News September 13, 2024

சென்னையில் திடீரென மின்தடை!

image

மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. புழல், ராயபுரம், திருவொற்றியூர், மைலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கொடுங்கையூர், தி.நகர், அசோக் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உங்க ஏரியாவில் கரண்ட் இல்லையா?

News September 12, 2024

சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

image

நாளை (செப்டம்பர் 13) பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் ரயில் நிலையத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து இந்த ரயிலானது செப்டம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45 இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News September 12, 2024

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி(72) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் இளம் வயதில் இருந்தே நீதிக்காக போராடிய பயமறியா தலைவர் யெச்சூரி. மதச்சார்பின்மை சமூக நீதிக்காக அவருடைய அளப்பரிய பணிகள் எதிர்கால சந்ததிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்றார்.

News September 12, 2024

தலைமை செயலகத்தில் உணவுத்துறை ஆய்வு கூட்டம்

image

உணவுத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 12, 2024

மகாவிஷ்ணு அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

image

அசோக் நகர் பள்ளியில் சர்ச்சை பேச்சில் சிக்கிய மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் மகாவிஷ்ணு அலுவலகத்தில் இருந்து HARD DISK மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து போலீசார் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருவதாக பழங்கரை வி.ஏ.ஓ. தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ராகுல் காந்தியை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்

image

சென்னையில் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்ததாவது: ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்று நமது நாட்டின் பெருமையை முற்றிலுமாக குளைத்து வருகிறார். தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றால் தமிழ்நாட்டில் நாற்பதற்கு 40 எப்படி கிடைத்தது. இன்னும் அவர்களுக்கு எமர்ஜென்சி புத்தி தான் இருக்கிறது. அது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்து பேசினார்.

error: Content is protected !!