India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 33 பேர் கைதாகியுள்ளனர். கோடம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்த தலைமைச் செயலக காலனியை சேர்ந்த அஜித், தினகர் அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஆகாஷ் ,அரவிந்த், ஸ்டாலின் அதேபோல் கே.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுபாஷ் சந்திர போஸ், கார்த்திக், கார்த்திகேயன், உள்ளிட்ட 33 பேரை சிறப்பு படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்திய வீரர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். விராட் கோலி, கே. எல். ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் மட்டும் முதற்கட்டமாக வந்தடைந்தனர். பிற வீரர்கள் அடுத்தடுத்து வருவார்கள். விரைவில் மைதானத்தில் பயிற்சி தொடங்கப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அதிநவீன கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவியை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தி.நகரிலுள்ள சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் செப். 13-14 என இரண்டு நாட்கள் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படம் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது படத்திற்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116 – வது பிறந்த நாள் வரும் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் உருவ படத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
ஓணம் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு எழும்பூரில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு இன்று பிற்பகல் 3.15 மணிக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45-க்கு புறப்பட்டு திங்கள் காலை 11.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 180 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இச்செய்தி புரளி என்பது அதிகாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பத்தாவது முறையாக மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் நேற்றிரவு முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100% மின்சாரம் விநியோகம் தொடங்கப்பட்டதாகவும், மின்தடையால் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மின்தடை நீடிக்கிறதா?
தெற்காசியாவின் முதல் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் நைட் ரேஸை வெற்றிகரமாக நடத்துவதற்கு அயராது உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி பங்கேற்று ஃபார்முலா 4 நடைபெற உழைத்த அதிகாரிகள், பந்தய ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பாளர்கள் என அனைவரையும் பாராட்டு விதமாக நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
Sorry, no posts matched your criteria.