India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயவர்தன் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் சேட்போட் (WhatsApp chatbot) மூலம் டிக்கெட் பெறும் வசதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தற்காலிகமாக முடங்கியுள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், CMRL பயண அட்டை, மொபைல் செயலி, யுபிஐ செயலிகள், சிங்கார சென்னை கார்டு போன்ற பிற சேவைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 216 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் 408 மில்லியன் கன அடி நீரிருப்பு உள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் அன்பழகன் என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலைகள் தாக்க உள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 42° செல்சியஸும், சென்னையில் 40° செல்சியஸும் பதிவாக வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த தாக்கம் வியாழக்கிழமை (ஏப்.18) முதல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சென்னை மண்டலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 14-15-16- தேதி மட்டுமே இயங்கும். ஏப். 17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படுள்ளது.
தண்டையார்பேட்டை 42வது வார்டுக்குட்பட்ட இரட்டை குளி தெருவில் இன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் மற்றும் 42 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா, ஜெய் மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பொன் இளவரசன் வட்டச் செயலாளர் பகுதி செயலாளர் உள்ளிட்டோர் கையில் வடைகளை வைத்து மத்திய அரசு வாயால் வடை சுடுகிறது என்பதை காட்டும் வகையில் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகாலை முதலே சிறுவியாபாரிகள் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதில் மல்லி (ம) ஐஸ் மல்லி ₹500, காட்டு மல்லி ₹400, முல்லை, ஜாதிமல்லி ₹450, கனகாம்பரம் ₹1000, ₹சாமந்தி 300, சம்பங்கி ₹250, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ் ₹140, சாக்லேட் ரோஸ் ₹160 என விற்கப்பட்டது.
மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்க குவிந்தனர். ஞாயிறு விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பல்வேறு வகையான மீன்கள் விற்கப்பட்டது. மேலும் மீன்பிடி தடைகாலம் வரவுள்ளது என்பதால் மீன் விலை தற்போது உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.