India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 37.6 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, சென்னை
மாவட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி நாளை (ஏப்ரல்.18) காலை 9 மணிக்கு சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் நடத்தப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வடபழனியில் உள்ள உணவகத்தில் இன்று கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது. பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இவ்விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனமுதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்களைத் தேர்தல் 2024 ஏப்.19 இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏப்ரல் 19 அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய்,கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்று 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் உள்ளிட்ட மதுபானக்கடைகள் மூடப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராயபுரம் கல்லறை சாலையில் உள்ள மதுகடையில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலை மோதியது. 3 நாள் விடுமுறை என்பதால், சிலர் மொத்தமாக வாங்கி சென்றனர். அதிக மதுபாட்டில்கள் முன்கூட்டியே விற்றதால், விரும்பிய மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என புலம்பினர்.
வடசென்னை மக்களவை தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் திருவொற்றியூரில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 86 வாக்காளர்களுக்கு 311 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் உள்ள, 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்களுக்கு, 4 ஆயிரத்து 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை மக்களவை தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் திருவொற்றியூரில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 86 வாக்காளர்களுக்கு 311 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்களுக்கு 4 ஆயிரத்து 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
தென்சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று வெளியிட்டார். அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை செளந்தரராஜனின் உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என
தமிழிசை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதியில் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(ஏப்.16) தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா உணவகம் போல ரயில் நிலையங்களில் மோடி உணவகம் அமைக்கப்படும்; கோயம்பேடு மார்கெட் வளாகத்தை மாற்ற முயற்சித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்; சென்னை – கடலூர் இடையே கப்பல் போக்குவரத்து கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.