India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விசிக தலைவர் திருமாவளவன், சிறிது நேரத்தில் அதனை டெலிட் செய்தார். “விசிக அரசியலில் அடியெடுத்து வைத்தபோது 1999-இல் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என முழங்கினோம். 2016-இல் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தோம். சராசரி நபரை பார்ப்பதுபோல் எங்களைப் பார்க்கக்கூடாது” என வீடியோவில் திருமாவளவன் பேசியிருந்தார்.
சென்னையை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில், ஒரு தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும். சுற்றுலா வளர்ச்சியைவிட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக மகளிர் காங்கிரஸ் ஸ்தாபன நாளையொட்டி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை 15.09.2024 அன்று தொடங்க இருக்கிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மதியம் 3:30 மணிக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடக்கி வைக்கிறார். இதில் 500- க்கும் மேற்பட்ட மகளிர் நாளை காங்கிரசில் இணைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னயில் பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர், “சென்னை எழும்பூர் பிரசிடென்சி பள்ளியில் 300 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 242 பேர் வந்துள்ளனர், ஒரு பார்வை குறைபாடு உடைய மாணவர் scribe தேர்வு எழுதி வருகிறார். 61 பணிகள் குரூப் 2 தேர்வில் உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளதாகவும் இந்தாண்டு இதுவரை 10,315 வேலைவாய்ப்பு உள்ளது” என்றார்.
GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட விவகாரத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “GST குறித்த தொழில் முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்படவேண்டிய ஒன்று. மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்கள், சிகாகோவில் 11 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,618 கோடி முதலீடு தமிழகத்துக்கு குவிந்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 11,516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று தொழில்கள் தொடங்கப்பட்ட உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1,679 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புகார்களின் படி ரூ.189 கோடிகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடி புகார் அளிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். மருத்துவர் சுதா சேஷய்யன் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியையாகவும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆர்வலரான அவர், 30க்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார்.
தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுத்ததால் கிளாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி என மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று (செப்.14) சென்னை திரும்பினார். சென்னை வந்த அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் விமானநிலைய விஐபி கேட் அருகே கூடியதால், ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Sorry, no posts matched your criteria.