India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் கழக கொடியேற்றி வைத்து, பெயர் பலகை திறந்து வைத்தார். மேலும், இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, பிறகு நீக்கிய வீடியோ குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். “விசிக-வின் கட்சி கொடியை கூட தமிழ்நாட்டில் ஏற்ற முடியாத ஒரு நிலை உள்ளது. ஆதி திராவிட மக்களுக்கு எந்த முன்னேற்ற திட்டமும் இல்லை இந்த பதிவின் மூலம் திருமாவளவன் திமுக மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்” என கூறினார்.
டான்ஜெட்கோ-வை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகங்களுக்கு 79 பேரை இடமாற்றம் செய்து டான்ஜெட்கோ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொழிற்சங்கம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஒன்றிய அரசின், வக்பு வாரிய சட்ட மசோதா சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை பறிப்பதாக நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். “இம்மசோதா வக்பு சொத்துக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களில் உள்ள போரா, ஆகாகனி என வெவ்வேறு பிரிவினருக்கு தனித்தனி வக்பு வாரியங்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம்களை கூறுபடுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,
“6 முதல் 12 ஆம் வகுப்பு வரை computer science படிப்பை கொண்டு வர முழு முயற்சியும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு 525 அரசு பள்ளி மாணவர்கள் ஐ ஐ டி, மற்றும் ஐ டி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஒன்றிய அரசு நிதி முக்கியமாக உள்ளது. தரமான கல்வியை தருகிறோம். கேட்கும் நிதியை விட நீங்கள் அதிகம் தர வேண்டும்” என்றார்.
இந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த நிதியாண்டில் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி டெல்லி முதலிடத்திலும், ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி ஹவுரா 2ம் இடத்திலும் உள்ளன.
அண்ணா பிறந்த நாளை ஒட்டி 129 காவல்துறை சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தலைமை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டது. சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல் நிலை காவலர், முதல் உதவி சிறை அலுவலர் 10 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 52 துறைகளில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக கூறி புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்து ஏமாற்றுகிறீர்கள் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறை செயலாளர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலக அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.