Chennai

News April 21, 2024

காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்த மக்கள்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று(ஏப்.21) ஒரு சில இறைச்சி கடைகள் மூடப்பட்டதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பல பகுதிகளை சேர்ந்த மக்கள் காசிமேடுக்கு மீன்களை வாங்க படையெடுத்து உள்ளனர்.

News April 21, 2024

சென்னை: இறைச்சி கடைகள் மூடல்!

image

சமண சமயத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி தினம் இன்று(ஏப்.21) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகள் விற்பனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி செயல்படும் கடைகள் மீது சீல் வைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

சென்னையில் கல்லூரிகளுக்கு சீல்

image

தமிழ்நாட்டில் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, வடசென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

News April 20, 2024

பொதுமக்களுக்கு இடையூறு: நடிகர் விஜய் மீது புகார்

image

நடிகர் விஜய் நேற்று (ஏப். 19) சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுமார் 200 பேர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும் , அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2024

சென்னை திரும்ப சிறப்பு ரயில்

image

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்று(ஏப்ரல் 20) மாலை 4:30க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3:50க்கு எழும்பூரை வந்தடையும். அதேபோல், நாளை (ஏப். 20) அதிகாலை 5:30க்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் பிற்பகல் 1:20க்கு எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

சென்னை மக்களால் குறைந்த சதவிகிதம்!

image

சென்னை நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார். நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

சென்னை: 540 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

image

தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 540 கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

News April 20, 2024

சென்னை: குடும்பமாக 21 பேர் வாக்களிப்பு!

image

தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அப்போது, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஒன்றாக சென்று வாக்களித்தனர். மேலும், 1977ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும், குடும்பத்துடன் ஒன்றாக சென்று வாக்களித்து வருவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தனர். பின்னர் 21 பேரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

News April 20, 2024

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபட்டவர் உயிரிழப்பு

image

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா(64). திமுகவில் பகுதி பிரதிநிதியாக இருந்து வந்த இவர் நேற்று(ஏப்.19) மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கல்லறை சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பணியில் இருந்தார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி வந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், அக்பர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

News April 19, 2024

கடைசி இடத்தில் சென்னை

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதன்படி ஒட்டுமொத்தமாக வடசென்னை தொகுதியில் 69.26% வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னை தொகுதி 67.35% மற்றும் தென்சென்னை தொகுதி 67.82 % வாக்குகள் பதிவுடன் கடைசி இடங்களை பிடித்துள்ளது.