India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் குடும்ப விழாவாக அனுசரிக்கப்பட, இந்த விநாயக சதுர்த்தி சுதந்திர போராட்டத்தின்போது பாலகங்காதர திலகரால் விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாவை நடத்தி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.
சென்னை – திருவான்மியூர் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசரின் இளைய மகன் சாய் விஷ்ணுவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. நடிகை மேகா ஆகாஷ் உடன் திருமணம் நடைபெற்றது. இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர், பாமக நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தொழில் முதலீடுகள் குறித்தும், திமுக ஆட்சியில் எவ்வளவு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறித்தும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியை பொறுத்தவரை ஒரு காலி பெருங்காயம் டப்பா தான். மதுவில் மட்டும் ரூ.56,000 கோடி வருமானம் வந்துள்ளது. அதை வைத்து தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்கலாம்” என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சயின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, முதல்வர் ஸ்டாலின் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சைதாப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி, மேயர் பிரியா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள், அதிமுக உறுப்பினர்கள் என ஏராளமானோர் திரண்டு சிறப்பித்தனர்.
சென்னையில் நீர்நிலை, பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறி கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் இந்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி 3 குழுக்களை நியமித்துள்ளது.
சென்னையில், இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் நலம் கருதி இன்று கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் ரயில் பாதையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள், பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் இதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க, அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. ஆனால், தற்போது வெயில் அடித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதால், மக்கள் மழையை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
குரோம்பேட்டை, பல்லாவரம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட முக்கிய சாலைகளின் சந்திப்பில், இருசக்கர வாகனங்கள் எதிர்திசையில் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவது, நெரிசல் ஏற்படுவது ஆகியவை வாடிக்கையாகி வருகிறது. விதியை மீறி எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் 1,000 வழக்குகள் பதிவு செய்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.