India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியாரின் பிறந்த நாள் விழா நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதில் உயிரிழந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையின் பதிவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து, மேலும் 4 வாரங்களுக்குள் தனியார் மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹிட்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தில் சிறப்பான பாடல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் காதல் கலந்த அரசியல் படமாக ஹிட்லர் படம் இருக்கும் எனவும் விஜய் ஆண்டனி மேடையில் பேசினார்.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை கால அட்டவணை மாற்றுவது வழக்கம். அந்த வகையில்,
நாளை மிலாடி நபியை ஒட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகமான மக்கள் பயணிப்பார்கள் என்ற அடிப்படையில் இந்த சிறப்பு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் 2025ஆம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் குமரகுருபரன், தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கடந்த சில வாரத்துக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 கிலோக்கு மேல் ஆடு, மாடு போன்ற அழுகிப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் என்.ஐ.பி சி.ஐ.டி மற்றும் ரயில்வே போலீசார் உடன் இணைந்து போதைப் பொருள் சம்பந்தமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்திய ஈழத் தமிழர்கள் 13 பேர் இணைந்து “ரத்தமாரே” எனும் படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் படக்குழுவினர் சென்னையில் நடிகர் ரஜினியை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் தினேஷா, “ரஜினியின் ‘ஜெயிலர்’ பட பாடல் வரியில் இருந்து ‘ரத்தமாரே’ என்ற தலைப்பை வைத்துள்ளோம். இந்த தலைப்புக்காக மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றோம்” என்றார்.
சென்னையில் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், “ராமசாமி படையாட்சியார் என்னென்ன செய்ய நினைத்தாரோ அதற்கு நேர் எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்று மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது திமுக அரசு. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முதலமைச்சருக்கு மனமில்லை” என்றார்.
சென்னையில் பேட்டியளித்த திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் வன்னியர் சமூகத்திற்கும் ஆதிதிராவிட சமூகத்திற்கும் வாழ்வாதார உரிமைகளுக்காக கல்வி மற்றும் சமூக நீதி உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இணைந்து போராடுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் சமூக நீதி போராளி எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் நினைவை போற்றி விசிக சார்பில் வீரவணக்கம் செலுத்தினோம்” என்றார்.
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே பழஞ்சூர் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்தும் நிலுவைத் தொகையான 23 கோடியை செலுத்தாததால் 25 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். அரசுக்கு பல கோடிகள் குத்தகை பாக்கி செலுத்தாமல் சீல் வைக்கும் இது போன்ற நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.