India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புரசைவாக்கம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில், மகளிர் முன்னேற்றத்திற்கான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இந்த சமுதாயக் கல்லூரிகளில் பயிற்சி 3 மாதம் முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் பயிற்சி சான்றிதழும், உதவித்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் எனக் கூறினார். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் பண்ணுங்க
2024-25ஆம் ஆண்டின் முதல் பாதியில், உங்கள் சொத்து வரியைச் செலுத்துங்கள் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி நினைவூட்டல் செய்துள்ளது. உங்கள் வரியைச் செலுத்தி, 1% அபராத வட்டியை ஒவ்வொரு மாதத்திற்கும் தவிர்த்திடுங்கள். சொத்து வரியை செலுத்த இன்னும் 14 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், உங்கள் சொத்து வரியைச் செலுத்த இங்கே <
செங்குன்றத்தில் இருந்து தாம்பரத்திற்கு ‘104’ என்ற எண் கொண்ட மாநகரப் பேருந்து இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி கழுத்தில் மாலை, தலையில் கிரீடத்துடன், சாலை நடுவே பைக் மற்றும் கார்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முதல் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த ராமசாமி படையாட்சியின் 107-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிண்டி அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் பேட்டியளித்த முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “முன்பு திருமாவளவன் மிரட்டி கொண்டிருந்தார், தற்போது மிரட்டப்பட்டுள்ளார். சீட் பேரத்திற்காக நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார். மதுவிலக்கு என்ற உயரிய கொள்கையை வைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்” என திருமாவளவனை விமர்சித்து பேசினார்.
பெரியாரின் பிறந்த நாள் விழா நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதில் உயிரிழந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையின் பதிவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து, மேலும் 4 வாரங்களுக்குள் தனியார் மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.