India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமார் விசாரணைக்கு இன்று ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ராஜ்குமார் இடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நந்தனம் அரங்கில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் வழங்கப்படும் விருது பட்டியலை திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் முன்னோடியாகக் கருதப்படும் 108 வயது மூதாட்டி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் வயதிலேயே சிறக்க சென்ற அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது, இந்திய மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மாலை பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. கொண்டிதோப்பு பகுதியில் பொது மருத்துவ முகாம்களும், இசிஆர் பகுதியில் மகப்பேறு, தோல் மருத்துவ முகாமும், இளங்கோ நகர் சாந்தோம் நெற்குன்றம் பகுதிகளில் பல் மருத்துவ முகாம்களும் இன்று மாலை 4:30 மணி அளவில் தொடங்கி இரவு 8:30 மணிக்கு முடிவடையும்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 184 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளில் நாடுமுழுவதும் ரத்ததான மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17 நாள் அமெரிக்க பயணத்தில் முதலீடுகளை ஈர்க்காததை மறைப்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் சேர்ந்து கடந்த 4 நாட்களாக நாடகம் ஆடி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
நந்தனம் YMCA மைதானத்தில் செப்டம்பர் 17 இன்று திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் (AI) தொழில்நுட்பம் மூலம் கலைஞர் வாழ்த்துரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.75க்கும், தக்காளி ரூ.35க்கும், உருளைக்கிழங்கு ரூ.45க்கும், பீன்ஸ் ரூ.50க்கும், சவ், முள்ளங்கி மற்றும் வெண்டைக்காய் ரூ.20க்கும், முட்டைக்கோஸ் ரூ.15க்கும், புடலங்காய் ரூ.25க்கும், பாகற்காய் ரூ.35க்கும், முருங்கைக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மிலாடி நபியை முன்னிட்டு இன்று மெட்ரோ ரயில்கள், சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, 6 நிமிட இடைவேளையிலும், அதேபோன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, 7 நிமிட இடைவேளையிலும் ரயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று (செப்.17) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு, கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 15 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 175 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த செய்தியை SHARE பண்ணுங்க
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் கண்ணகி, பாலசுப்பிரமணி, மயிலாப்பூர் பகுதியில் பாலகுரு, ராமசுந்திரம் கீழ்பாக்கம் பகுதியில் வகிதாபேகம், ஹேமாவதி, அடையார் பகுதியில் பிரவின் ராஜேஷ், தியாகராய நகர் பகுதியில் முகேஷ் ராவோ ஆகிய அதிகாரிகள் இன்று இரவு வாகன ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.