Chennai

News May 1, 2024

சென்னை: ரயில் பயணிகள் கனவத்திற்கு..!

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று(மே 1) விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன், பயணிகள் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

சென்னை: போதைப்பொருட்கள் விற்ற 24 பேர் கைது!

image

சென்னையில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான 7 நாளில் கஞ்சா கடத்திய 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News May 1, 2024

பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி

image

சென்னை பெரம்பூரில் இருந்து வியாசர்பாடி செல்லும் சாலையில் கல்லூரி மாணவர் விஷ்வா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 1, 2024

சென்னை மெட்ரோ: இன்று முதல் கட்டணம் உயர்வு

image

இன்று(மே 1) முதல் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரும்பாக்கம் மற்றும் பரங்கி மலை மெட்ரோ நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

News April 30, 2024

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை: நாளை (மே.1) அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8 முதல் நண்பகல் 11 வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும் காலை 5-8 மணி வரை, நண்பகல் 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8-10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

15 கிலோ பித்தளை பாத்திரங்கள் திருட்டு

image

தி.நகர் சாரதி தெருவை சேர்ந்தவர் மாதவன்(67). இவர், பெங்களூரில் வசிக்கும் தனது பேத்தியை பார்க்க கடந்த பிப்.24ஆம் தேதி சென்று அங்கு தங்கியுள்ளார். ஏப்.24ஆம் தேதி சென்னை திரும்பிய நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்புறக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 15 கிலோ பித்தளை பாத்திரங்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 30, 2024

இன்றே கடைசி நாள்

image

சென்னை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றைக்குள் (30.4.24) செலுத்தினால், வரியில் 5% வரை தள்ளுபடி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தாவிட்டால், 1% வட்டியுடன் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

பேருந்து நிலையம் இடமாற்றம்

image

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை, தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனால், தீவுத்திடலுக்கு தற்காலிகமாக பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

News April 30, 2024

சென்னை: தயார் நிலையில் சுகாதார மையங்கள்!

image

சென்னையில் நிலவும் கடுமையான வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அவசர சிகிச்சை அளிக்க நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளதாகவும், குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் .

News April 30, 2024

கோயம்பேடு அருகே கொலையாளி கைது!

image

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பொன்மாலா, அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த வெங்கடேசனுடன்(36) தனிமையில் இருந்துள்ளார். இதனை பொன்மாலாவின் கணவர் துரைப்பாண்டியன்(52) கையும் களவுமாக பிடிக்கவே, அவரை வெங்கடேசன் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடினார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் கொலை செய்தது உண்மை என தெரியவர இன்று வெங்கடேசனை கைது செய்தனர்.