Chennai

News September 18, 2024

3 ரயில் பெட்டிகள் கழண்டு விபத்து: போலீசார் விசாரணை

image

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய ‘சேது எக்ஸ்பிரஸ்’ ரயில், நேற்று இரவு 8:20 மணியளவில் புறப்பட்டது. அதிகாலை 1:15 மணிக்கு திருச்சி சென்றபோது, ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தானாக கழண்டு பிரிந்துள்ளது. இதனால், ரயிலில் இருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர். இதுகுறித்து, தென்னக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 18, 2024

INDvsBAN டெஸ்ட் போட்டிக்கு நாளை விற்பனை டிக்கெட்

image

IND – BAN இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்டுகள், நாளை காலை 7 மணி முதல் விற்பனை செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும், அன்றன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.200, ரூ.400, ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இங்கே <>கிளிக் <<>>செய்யுங்கள்.

News September 18, 2024

ரவுடி என்கவுன்டர்: விளக்கம் கூறிய இணை ஆணையர்

image

பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜியை, போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொண்டனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் பர்வேஷ் குமார், “கஞ்சாவுடன் தப்பிச்சென்றவரை விரட்டிச் சென்று, போலீசார் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது, ரவுடி காக்காதோப்பு பாலாஜி 2 முறை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் மட்டுமே, போலீசார் திரும்ப என்கவுன்டர் நடத்தினர்” என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

News September 18, 2024

“என்கவுன்டர் செய்தால்தான் ரவுடிசம் குறையும்”

image

வியாசர்பாடியில் இன்று அதிகாலை காக்கா தொப்பு பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டிஜிபி ரவி, “2006-யில் நான் ஜாயின்ட் கமிஷ்னராக இருந்தபோதே பாலாஜி எங்களுடைய Hit List-ல வந்தவர்தான். என்கவுன்டர் செய்தால்தான் இதுபோன்ற ரவுடிசம் குறையும். இது ஒரு பெரிய விஷயம் இல்லை. உபி.யில் நூற்றுக்கணக்கில் என்கவுன்டர் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

News September 18, 2024

காக்கா தோப்பு பாலாஜியின் தாய் குற்றச்சாட்டு

image

கடந்த 10 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்த எனது மகனை காவல்துறையினர் இப்போது சுட்டு கொன்றுள்ளனர் என காக்கா தோப்பு பாலாஜியின் அம்மா கண்மனி குற்றசாட்டியுள்ளார். சம்போ செந்திலை பிடிக்கும் முயற்சியில் தான், எனது மகனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். சம்போ செந்திலை பிடிக்க முடியவில்லை என்றால் ஏன் அவரது மனைவியை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 18, 2024

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மாநகராட்சி நடவடிக்கை

image

சென்னை மாநகராட்சி, முதலீட்டாளர்களுக்கு, அவர்களின் முதலீடுகளுக்கு வட்டி வழங்கும் வகையில், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ₹1,500 கோடி திரட்ட முனிசிபல் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாதிரியானது, முதலீட்டாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து நிதியை ஈர்க்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அனுமதிக்கிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2024

சென்னை 8ஆம் வகுப்பு மாணவி மோடி படத்தை வரைந்து சாதனை

image

போரூர், கொளப்பாக்கத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி பிரெஸ்லி ஷேக்கினா(13), பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறு தானியங்களைக் கொண்டு அவரது படத்தை பிரம்மாண்டமாக வரைந்து உலக சாதனை படைக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து, 600 சதுர அடி பரப்பில் 800 கிலோ சிறு தானியங்களைக் கொண்டு மோடியின் உருவத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

News September 18, 2024

என்கவுன்டர் நடந்த இடத்தில் காவல் துணை ஆணையர் ஆய்வு

image

வியாசர்பாடியில் காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல் துணை ஆணையர் முத்துகுமார் ஆய்வு செய்தார். இன்று அதிகாலை, பாலாஜியை, போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர், போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News September 18, 2024

சென்னையில் அதிக வெப்பநிலை பதிவு

image

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் இன்றும் அதிக வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 18, 2024

185 வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 185 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!