Chennai

News September 19, 2024

அண்ணா சதுக்கம் அருகே மின்தடை!

image

சென்னை அண்ணா சதுக்கம் முதல் கண்ணகி சிலை வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை. தெரு விளக்குகள் மற்றும் சிக்னல்கள் ஏரியாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா நினைவிடம் இருளில் மூழ்கியது. சென்னையில் மின்சார பாதிப்பு தொடர் கதையாக உள்ளது. தங்கள் பகுதியில் மின்சாரம் இருக்கிறதா என கமெண்ட் செய்யவும்.

News September 18, 2024

செப்டம்பர் மாதத்தில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை

image

தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவே, வெயில் சுட்டெரிக்கும் என அவர் கூறியுள்ளார். மதுரையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் இதுவே அதிகபட்சம்.

News September 18, 2024

பருவமழை: குடியிருப்போர் சங்கங்களுக்கு பயிற்சி

image

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கங்களின் பட்டியலை தயாரித்து விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிவுறுத்தல்கள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டங்கள் மூலம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

News September 18, 2024

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்வோர் குடை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். மழை பெய்யுமா?

News September 18, 2024

மாமூல் கேட்டு மிரட்டிய 6 ரவுடிகள் கைது

image

எண்ணூர் விரைவுச்சாலை அருகே, டி-மார்ட் வணிக வளாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை, மோகன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் கட்டி வரும் நிலையில், அங்கு வந்த ரவுடிகள் சிலர் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவொற்றியூரைச் சேர்ந்த கேட் கார்த்திக், விஜி, ராஜா, சபீர் அகமது, லோகேஷ் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.

News September 18, 2024

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) தலா 260 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு தலா 65 பேருந்துகளும், மதவாரத்தில் இருந்து தலா 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 18, 2024

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டம்

image

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் வட மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம். வழக்கமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப்பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்பு. இதனால், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமித்து இயக்க திட்டம்

News September 18, 2024

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?

News September 18, 2024

சவர்மா சாப்பிட்டதால் ஆசிரியை பலி? போலீஸ் விசாரணை

image

போரூர் உணவகத்தில் கடந்த 7ஆம் தேதி ஆசிரியை சுவேதா சவர்மா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சுவேதாவுக்கு தொடர்ச்சியாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து, சிகிச்சை பலனின்றி அண்மையில் சுவேதா உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கில், மதுரவாயல் போலீசார் சுவேதா சவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 18, 2024

3 ரயில் பெட்டிகள் கழண்டு விபத்து: போலீசார் விசாரணை

image

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய ‘சேது எக்ஸ்பிரஸ்’ ரயில், நேற்று இரவு 8:20 மணியளவில் புறப்பட்டது. அதிகாலை 1:15 மணிக்கு திருச்சி சென்றபோது, ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தானாக கழண்டு பிரிந்துள்ளது. இதனால், ரயிலில் இருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர். இதுகுறித்து, தென்னக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!