India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்பேடு பூ சந்தையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, ரோஜா பூ ரூ.40, செண்டுமல்லி ரூ.60, சாமந்தி பூ ரூ.110, சம்பங்கி பூ ரூ.70, கனகாம்பரம் ரூ1,000, மல்லி ரூ.1,200, அரளி பூ ரூ.70க்கு விற்பனையாகிறது. நேற்றைவிட இன்று ரூ.10 – ரூ.15 வரை விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் தீபா, திருமணம் ஆகாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் நடத்திய விசாரனையில், நேற்றிரவு புரோக்கர் மூலம் தீபாவை வர வைத்ததாகவும், பின்னர் பணம் கொடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், தீபாவைக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து, மணிகண்டனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் அடுத்து 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில், தற்போது அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வெளியே செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Ms. சிலை ஜாக்கி (Ms. Silai Zaki), அமைச்சர் மா.சுப்பிரமணியனை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசணை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஆஸ்திரேலியா நாட்டின் துணை தூதர் உடன் இருந்தனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பாலாஜியின் உடலானது, அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும், கோயம்பேடு கோதாவரி நகரில் உள்ள அவரது தம்பியின் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பல்கலை. துணை வேந்தர்களை முதலமைச்சரே நியமிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் வந்தவர் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா வழக்கில் கைதான சத்தியமூர்த்தி நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின் பெயரில் இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஜே ஜே நகர், டிவிஎஸ் நிழற்சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று இரவு பெய்த மழை சற்று குளிர்வித்தது. காலை நேரத்திலும், பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) தலா 260 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு தலா 65 பேருந்துகளும், மதவாரத்தில் இருந்து தலா 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.