India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில், வாட்டும் வெயிலிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று(மே 6) செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் நிழல் பந்தல் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி உள்ளிட்ட 10 பகுதிகளில் அடுத்த 3 நாளில் நிழல் பந்தல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பாடவாரியாக பெற்ற 100 சதவீத மதிப்பெண் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வணிகவியலில் 16 பேர், கணினி பயன்பாடுகளில் 14 பேர், பொருளாதாரத்தில் 12 பேர், கணினி அறிவியலில் 9 பேர், கணக்கியலில் 2 பேர், புவியியல், கணிதம், விலங்கியல் ஆகியவற்றில் தலா ஒரு நபரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், காமெடி நடிகர் கிங்காங் மகளும் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்த நிலையில், அவர் பெற்ற மதிப்பெண் விபரங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, கிங்காங் மகள் 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 35 பள்ளிகளில் இருந்து மொத்தம் 4998 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 4355 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87.13 ஆகும். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தொடக்க பள்ளிக்கல்வி இயக்குநர் சேதுராம வர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ” மாணவர்கள் தங்களை மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (மே7) ஆன்லைன் மூலமாகவோ அல்லது பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்தார்.
சென்னை வானகரம் அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் சென்னை, லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான திருநங்கை நிவேதா(20), பொதுத் தேர்வில் 600க்கு 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் ஒரே ஒரு திருநங்கை இவர் மட்டும்தான். இவர் தற்போது நீட் தேர்வு எழுதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை, வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய் கடித்து படுகாயமடைந்த மாநகராட்சி பூங்கா காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தி நேற்று(மே 5) கைது செய்யப்பட்ட நிலையில இன்று அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் 94.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 96.20% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஏப்.6ம் தேதி, தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3.99 கோடியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிலரை விசாரித்து வாக்குமூலம் பெற்ற்றனர். இதை தொடர்ந்து, தொழில்துறை பிரிவு மாநில து.தலைவர் கோவர்தனனை, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.