Chennai

News May 7, 2024

சென்னையில் மின்தேவை புதிய உச்சம்

image

சென்னை மாநகரில் மின்தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி 4,470 மெகாவாட்டாக இருந்ததே உச்சமாக இருந்த நிலையில், நேற்று (மே 6) இரவு 10.30 மணிக்கு 4,590 மெகாவாட்டாக மின்தேவை உயர்ந்துள்ளது. மேலும், மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்த்தனன் வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஓட்டல் ஆகிய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவர்தன் மற்றும் அவரது மகனிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது.

News May 7, 2024

“எலும்பை உடைக்கும் அளவுக்கு வலிமையான நாய்”

image

சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மே 5 ஆம் தேதி ராட்வீலர் நாய்கள் கொடூரமாக கடித்து குதறின. இந்த வகை நாய்களை கூண்டில் வளர்ப்பதுதான் நல்லது. எலும்பை கடித்து உடைக்கும் அளவுக்கு அதன் தாடைகள் வலுவானது. இந்தியா மட்டுமின்றி இஸ்ரேல், ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

image

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் 55 ஸ்பாக்களுக்கு இன்று(மே 7) போலீசார் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாக ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

தெற்கு ரயில்வே அட்டவணையில் மாற்றம்

image

சென்னை கடற்கரையில் இருந்து இன்றிரவு 8.35 மற்றும் 10.05 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில், இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயங்கும். இது தவிர காட்பாடி- ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News May 7, 2024

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

News May 7, 2024

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அம்சங்கள்!

image

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அல்லது ஒயிட் ஹவுஸ் என்பது சென்னையில் 1639 இல் நிறுவப்பட்ட கோட்டையாகும். மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை தான் மெட்ராஸ் நகரத்தை உருவாக்க காரணமானது. பல ஆட்சியாளர்களிடம் இருந்த இக்கோட்டை, தற்போது தமிழ்நாடு மாநில சட்டமன்றத்திற்கான நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. இந்திய ராணுவத்தின் நிர்வாக ஆதரவுடன் இந்திய தொல்லியல் துறையால் இக்கோட்டை பராமரிக்கப்படுகிறது.

News May 7, 2024

சிறுமியை கடித்த நாய்கள் மதுரைக்கு இடமாற்றம்

image

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று முன்தினம்(மே 5) இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறின. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அந்த நாய்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அவற்றை அதன் உரிமையாளர் மதுரைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

News May 7, 2024

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றோர் கைது

image

சென்னையில், இன்று(மே 7) அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் தாக்கப்படுவதாக கூறி அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.