India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் அவரிடம் 800 கிராம் எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து சிலம்பரசனை இன்று(மே 9) கைது செய்தனர்.
எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(28). பொறியியல் பட்டதாரியான இவர் வேலையின்றி இருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தீபக்(28) என்பருடன் அறிமுகமாகியுள்ளார். தீபக் தனது உறவினர் பெங்களூர் ஐடி கம்பெனியில் மேலாளராக உள்ளதாகவும் அவரிடம் சொல்லி வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ 20 லட்சத்தை ஸ்ரீகாந்திடம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் தீபக்கை கைது செய்தனர்.
சென்னையில் நாய் வளர்க்க உரிமம் பெறும்படி மாநகராட்சி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “சென்னையில் நாய் வளர்க்கும் அனைவரும் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் நாய் வளர்ப்பவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. 2023ல் 1,500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். 3 நாட்களில் உரிமம் பெற 1,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என தெரிவித்தார்.
திருவொற்றியூரை அடித்த மீஞ்சூர் அத்திப்பட்டில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல் மண் நிலையத்தில் இரண்டு அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதலாவது அலகில் உள்ள மூன்றாவது நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகா வாட் மற்றும் 2வது நிலையில் 2வது அலகில் 600 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இன்று(மே 9) 2 கண்காணிப்பு கேமராக்கள் திடீரென பழுதாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் மட்டும் பழுதாகியதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் வெயிலில் வரும் வாகனம் ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில் சென்னையில், ரிப்பன் மாளிகை எதிரில் உள்ள சிக்னல், எழும்பூர் தமிழர் சாலை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பந்தல் அமைக்கப்பட உள்ளது.
சென்னை, சென்ட்ரல் அருகே பேருந்தின் கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புதுக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 20 பேர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, பெரம்பூர் பகுதியில் நேற்று(மே 7) பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், டியோ பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆபத்தான முறையில் விபரீதம் அறியாமல், இளைஞர்கள் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், வாகனத்தின் பதிவெண் கொண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பைக் சாகசம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வந்ததால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் வெப்பத்தை தணிக்கும் விதமாக, சில பகுதிகளில் இன்று(மே 8) அதிகாலை திடீரென மழை பெய்தது. சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், வடபழனி, தாம்பரம், பல்லாவரம், நந்தனம், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சற்றே குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை, ஜாபர்கான்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் சரவணன்(32). இவருக்கு நிரஞ்சன் சாய் எனும் 1 வயது ஆண் குழந்தை இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு, கீழே இருந்த வேர்கடலை பருப்பை எடுத்து குழந்தை சாய் விழுங்க முயற்சித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நேற்று(மே 7) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
Sorry, no posts matched your criteria.