Chennai

News September 21, 2024

அம்பேத்கர் சட்டப் பல்கலை. 14ஆவது பட்டமளிப்பு விழா

image

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யின் 14ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29ஆம் தேதி பெருங்குடி வளாகத்தில் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2024 மே மாதத்தில் நடந்து முடிந்த சட்டத் தேர்வில் சட்டப் படிப்பை முடித்தவர்கள், மேலும் இதுவரை பட்டமளிப்புக்கு விண்ணப்பிக்காதவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 27ஆம் தேதிக்கு முன்பே www.tndalu.ac.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.

News September 21, 2024

கூட்டு பாலியல் வழக்கில் 3 பேருக்கு புழல் சிறை

image

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் புழல் சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளனர். தாம்பரத்தை எடுத்த தாழம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 21, 2024

சென்னையில் 1.81 லட்சம் தெருநாய்கள்

image

உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி பிரத்யேக மொபைல் செயலி மூலம் கணக்கெடுக்கப்பட்டு மாநக மேயர் பிரியாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அம்பத்தூர், மாதவரம், வளரவாக்கம் ஆகிய மண்டலங்களில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளன. ஒட்டுமொத்தமாக சென்னையில் 1.81 லட்சம் தெரு நாய்கள் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.

News September 21, 2024

வேளச்சேரி அதிமுக நிர்வாகி வீட்டில் சோதனை

image

சென்னை வேளச்சேரி ஆண்டவர் நகரில் உள்ள அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அரசு திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 1200 சதுர அடியை தனது பெயருக்கு மாற்றியதாக எழுந்த புகார் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. அரசு நிலத்தை முறைகேடாக விற்க உதவியதாக அப்போதைய வட்டாட்சியர் மணி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 21, 2024

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு

image

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதிக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News September 21, 2024

சென்னையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 21, 2024

ரூ.14,000 உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி

image

தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு ரூ.14,000 மாத உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர செப்.29ஆம் தேதி குரோம்பேட்டை போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.

News September 21, 2024

நீட் விலக்கு தர வேண்டிய சூழல் நிச்சயம் வரும்: அமைச்சர் உறுதி

image

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பேட்டி அளித்தார். அதில், “நீட் விவகாரம் தொடர்பாக 4 முறை ஒன்றிய அரசு தரப்பில் இருந்து தமிழ்நாடு அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் இருந்து ஏன் விலக்கு வேண்டும்? என காரணங்களுடன் விளக்கியுள்ளோம். எனவே தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு நிச்சயம் ஏற்படும்” என்றார்.

News September 21, 2024

5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

image

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதியை ஆகிய ஐவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் இன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஐந்து நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

News September 21, 2024

தெருநாய்களில் 27% மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன

image

சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெருநாய்களில் 27% மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன. அதாவது 73% நாய்களால் இன்னும் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்று GCC இன் நாய் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நகரின் 200 வார்டுகளில் கருத்தடை விகிதம் கணிசமாக வேறுபடுகிறது. சில வார்டுகளில் 2% ஸ்டெரிலைசேஷன் கவரேஜ் குறைவாக உள்ளது. மற்றவை 73% வரை எட்டியுள்ளன என்று சென்னை மாநகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!